பக்கம்:நாகப்பட்டினம்.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. இன்று - நாளை- நாகை

இன்று - நாளை

இதுவரை நாகை எட்டு நிலைகளில் விவரிக்கப்பெற்றது. வரலாற்றில் தொடங்கி, பெயர், ஆட்சி, நகரமைப்பு, மக்கள், சமயம், வணிகம் - தொழில், கற்றார் வரை நாகை பதிவுகளைப் பெற்றது.

இவ்வெட்டு நிலைகளிலும் நாகை இன்று எவ்வாறுள்ளது: நாளை எவ்வாறாகலாம் அல்லது எவ்வாறு ஆகவேண்டும் என்று காண்பதே இன்று - நாளை - நாகை ஆகும். இன்று என்பது நிகழ்கால எல்லையின் படப்பிடிப்பு. நாளை என்பது வருங்கால நலத்தின் எதிர்பார்ப்பு. நேற்றைய நிலையை வைத்து இன்றைய நிலையைக் காணும் போதே இன்றைய நிலையை அடிப்படையாகக் கொண்டு நாளைய விளைவையும் ஒரளவில் கணிக்க முடியும். அக்கணிப்புடன்பொதுவில் நாகை நலம் கருதிய எதிர்பார்ப்பையும் குறிப்பது நூல் முறையும் ஆகும்.

அ. வரலாற்று நாகை

வரலாறு

வரலாறு என்பது ஆங்கிலத்தில் History' என்றும் வடமொழி யில் சரித்திரம் என்றும் சொல்லப்பெரும் வரலாறு என்னும் தமிழ்ச்சொல் மற்றைய இரண்டிற்கும் முந்தியது. முதன் முதலில் சங்கப் புலவர் நல்லந்துவனார் இச்சொல்லை எடுத்தாண் டுள்ளதைப் பரிபாடலில் காண்கிறோம். வைகை ஆற்றில் பல செல்வர் நீராடுவதால் அவர் பூசியிருந்த மணப்பொருள்களாம் மணச்சாறும் சந்தனமும் மண நெய்யும் அணிந்திருந்த மண மலரும் நீரை மணக்க வைத்துள்ளன. அத்தகைய மனக்கும் யாறு வரும் நிலையை, - .

"யாறு வரலாறு" (வரல் + ஆறு) (1) என்று பாடினார். எனவே பழந்தமிழ்ச் சொல்லாகிய வரலாறு - வருதலாகிய நிலை என்னும் பொருள் கொண்டது. இவ்விடத்தில் வந்த நிலை என்பது இறந்த காலத்தைக் காட்டுவது. எனவே, காலப்பாங்கில் நிகழ்ந்ததைக் குறிப்பது வரலாறு. தமிழில் தொடர்ந்து வரும் மரபுமுறை வரலாற்று முறை எனப்படும். வரலாற்று வஞ்சி என்றவொரு சொல் செய்யுள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/375&oldid=585258" இலிருந்து மீள்விக்கப்பட்டது