பக்கம்:நாகப்பட்டினம்.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 நாகபட்டினம்

வகையையும், இச்செய்யுளில் எழுதப்பெறும் சிற்றிலக்கியத்தையும் குறிக்கும். இளம்பூரணர், பேராசிரியர் என்னும் தொல்காப்பிய உரையாசிரியர் இருவரும் ஒர் இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டாகக் (உதாரணமாக) காட்டுவதை வரலாறு' என்றே எழுதினர்.

எனவே, காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சியை அப்படியே காட்டுவது வரலாறு. இவ்வரலாற்றில் நாகை இடம்பெற்றதை வரலாற்று நாகையில் கண்டோம்.

வரலாற்றுக் காலத்தை வகுத்த வரலாற்று ஆசிரியர் காலத்தை வைத்தே மூன்றாகக் கொண்டனர். முற்கால வரலாறு (Anciant History) கி.பி. 476 வரை என்றும், இடைக்கால வரலாறு (Mediaeval History) கி.பி. 476 முதல் 15ஆம் நூற்றாண்டு வரை என்றும், இக்கால வரலாறு (Modern History) 15ஆம் நூற்றாண்டிற்குப் பின் என்றும் வகுத்துள்ளனர். -

வரலாறு திரும்ப நிகழாது என்றும் வரலாறு மீண்டும் நிகழும் என்றும் இருவகைக் கருத்துக்கள் உள்ளன. முதற்கருத்தை இங்குக் கொண்டு வரலாற்று நாகையில் நிகழ்ந்தவற்றின் நீள் தொடர்பில் நாகையின் இன்றைய நிலை என்ன என்று முதலில் காணலாம். இன்றைய வரலாறு

இன்றைய நாகை, வரலாற்றின் பதிவுக்கு உரியதா என்றால் "ஆம்" என்றோ இல்லை என்றோ கொள்ளாமல் பதியத்தக்க வரலாற்றின் முதற்படியில் நிற்கிறது என்று கொள்ள வேண்டும்.

இன்று அமைந்திருக்கின்ற நாகை மாவட்ட அமைப்பு, நிலத்தடி வளத்தை வெளிக்கொணரும் அடித்தளச் செயல்கள், வளரத் தொடங்கியுள்ள கல்வி முதலியவற்றால் இன்றைய நாகை வரலாற்றுப் பதிவில் நிற்கிறது என்பது உண்மையே.

நாளைய வரலாறு

இன்று நிகழ்கின்ற நாகை நிகழ்ச்சிகளைக் கொண்டு இஃது இவ்வாறே வளர்ந்தால் நாகை நாளைய வரலாற்றில் ஒரு குறிப்பான இடத்தைப் பெறும்.

"வரலாறு ஓர் அறிவியலே; அதற்கு அதிகமும் இல்லை; குறைவும் இல்லை",

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/376&oldid=585259" இலிருந்து மீள்விக்கப்பட்டது