பக்கம்:நாகப்பட்டினம்.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 நாகபட்டினம்

அமையும்.அமைந்து நாகப்பட்டினம் ஆகும். வரலாற்றின்படி நாகம் பட்டினம் பொருந்தாது. ஆகையால் நாகர்பட்டினம் என்பதே காலப்போக்கில் மக்கள் ஒலிப்பில் "ர்" போய் நாகபட்டினம் ஆயிற்று என்றே கொள்ள வேண்டும்.

எனவே, நாகபட்டினம் என்று எழுதுவதே பொருந்தும். பட்டினம் - பட்டணம் -

மற்றொரு பிழை செய்வோரும் உள்ளனர். அப்பிழை நாகபட்டணம் என்று பட்டணமாக எழுதுவது. பட்டினம் என்பது துறைமுக நகரம். அச்சொல்லின் பிழையான உருவந்தான் பட்டனம்'.

எனவே, நாகப்பட்டணம் என்று எழுதுவதைவிட்டு நாக பட்டினம் என்றே எழுத வேண்டும். சிலர் பட்டினம் என்ற சொல் கடற்கரை நகரைக் குறிக்கும் என்றும், பட்டணம் என்ற சொல் உள்ளே அமைந்த நகரத்தையோ, ஊரையோ குறிப்பதாகக் கொள் ளலாம் என்றும் கூறுகின்றனர். இஃது ஏற்கத்தக்கதே. எவ்வா றாயினும் இது நாகபட்டினம் என்றே கொள்ளப்பட வேண்டும்.

இதன் மரூஉச் சொல்லே சொல்லாகிய நாகை என்பதில் தவறில்லை. இந்நூலில் பல இடங்களில் இடச் சுருக்கம் கருதி நாகை என்ற சொல்லே கையாளப்பெற்றது. கண்ணியம்மிகு காயிதே மில்லத்

இரண்டு ஆண்டுகளுக்கு முன் கீழைத்தஞ்சை மாவட்டத்துத் தலைநகராக இந்நகர் இருந்தபோது நாகபட்டினம் என்று முழுச்சொல்லாக வழங்கப்பெற்றது.

இன்றளவில் இசுலாமியச் செம்மல் திரு காயிதே மில்லத் அவர்களைப் போற்றும் கருத்தில் இப்புதுமாவட்டத்திற்கு அவர் பெயர் சூட்டப் பெற்றுள்ளது.

திரு காயிதே மில்லத் அவர்கள் இவ்வாறு போற்றுதற்குரிய பெருந்தகை. அவர் திருநெல்வேலியைச் சார்ந்த ஊராகிய கோட்டை யில் 5-6-1893இல் பிறந்தவர். நாடறிந்த நற்பெருந்தகை. நுண்ணிய அறிவும் பரந்த மனப்பாங்கும் உடையவர். கண்ணியம் மிக்க காயிதே மில்லத் என்று போற்றப்பெறுபவர்.

அவர் இந்தியப் பெருநாட்டளவில் புகழ்பெற்றவர். பொதுப் பணியின் பெருந்தகை. அவர்தம் பணிகளில் சிலவற்றைக் குறித்தே ஆக வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/378&oldid=585262" இலிருந்து மீள்விக்கப்பட்டது