பக்கம்:நாகப்பட்டினம்.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்று - நாளை - நாகை - 361

காந்தியடிகளது ஒத்துழையாமைப் போராட்டத்திலும் இந்திய விடுதலைப் போராட்டத்திலும் பங்கு கொண்டவர். இந்து - இசுலாமிய ஒற்றுமைப்பணியின் சின்னமாக விளங்கியவர். இந்திய அரசியல் விதிப்பு அவையில் உறுப்பினராக இருந்து மாநிலங்களுக்கு அதிக ஆட்சிஉரிமை வழங்கப்படவில்லை யென்றால் அவை மினுமினுக்கும் நகராட்சி போன்றவைகளே என்று நயம்பட உரைத்தவர். இவற்றிற்கெல்லாம் மணிமுடி போன்று இந்திய நாட்டு அரசின் தேசிய மொழிகளில் தமிழ் அமைய வேண்டும் என்று வற்புறுத்தி வெற்றி கண்டவர். சிறுபான்மையர் நலன் கருதும் பாங்குடையவர். முனைப்பாக இருந்து தமிழகத்தில் 14 இசுலாமியக் கல்வி நிறுவனங்களை அமைத்தவர். -

இப்பெருந்தகையின் பெயரை இப்புது மாவட்டத்திற்கு இட்டது ஒரு கடப்பாட்டைச் செலுத்தியதாகும். இசுலாமியப் பெருமக்கள் மட்டுமின்றி அனைவரும் எண்ணி மகிழத்தக்க ஒன்று இது.

இதன் முழுப்பெயர் நாகபட்டினம் காயிதே மில்லத் மாவட்டம்' என்பது. இதனை நாகை என்று சுருக்கி நாகை காயிதே மில்லத் மாவட்டம் என்று எழுதுகின்றனர். இது விரிவாக்கப்பட வேண்டியது. நாளைய பெயர்

வருங்காலத்தில் இப்பெயர் அஃதாவது "நாகபட்டினம் காயிதே மில்லத் மாவட்டம்" என்பது என்ன ஆகும் இன்றே நாகை என்று சுருங்கி வருகிறது. இவ்வகை வழக்கு உரிய முழுப்பெயரை மறைத்து விடுவதாகும். ஆயினும் அஞ்சல் துறை, புகைவண்டித்துறை, போக்குவரத்துத் துறை, பதிவுத் துறை முதலியவற்றில் முழுச் சொல்லமைப்பு உள்ளது. எனவே மாறாது; மாறக் கூட்ாது என்று கூறலாம்.

ஆனால், அரசியலால் ஏற்படும் ஆட்சி மாற்றங்களால் வருங்காலத்தில் என்ன ஆகுமோ எதனையும் எதிர் பார்க்கும் சூழல் வளர்ந்து வருகிறது. மாற்றமும் பெறலாம்; திரிக்கவும் பெறலாம். முளைவிடும் மதமான பேய் இப்பெயரை மாற்றக் கருதலாம். இவ்வாறு நேரும் போது மக்கள் மறுத்து பெரும் பண்பாட்டையும் பரந்த மனப்பாங்கையும் கூட்டி, கீழறுப்புக்காரர்களைத் தோல்வியுறச் செய்வர். இஃது உறுதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/379&oldid=585263" இலிருந்து மீள்விக்கப்பட்டது