பக்கம்:நாகப்பட்டினம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 () நாகபட்டினம்

அவனிடம் பரிசு பெற, பாணனை ஆற்றுப்படுத்தும் பாட்டு சிறுபாணாற்றுப்படை. பாணன் கடக்க வேண்டிய பல பகுதிகளைச் சொல்லி நல்லியக்கோடனுடைய ஒய்மா நாட்டிற்குள் புக வைப்பவர், அவன் நாட்டைச் சேர்ந்த எயிற்பட்டினம், வேலூர், ஆமூர் ஆகிய ஊர்களைக் கடந்தால் அவன் தலைநகரமாகிய கிடங்கில் என்னும் மூதூரை அடைவாய்' என்றார்.

இவற்றுடன் நல்லியக்கோடனைப் பற்றிக் கூறும் நத்தத்தனார், "குறிஞ்சிக் கோமான் கொய்தளிர்க் கண்ணிச் செல்லிசை நிலைஇய பண்பின் நல்லியக் கோடன்" (11) என்று நிறைவு செய்தார். இதில் அவனைக் "குறிஞ்சிக் கோமான்" என்று மலை நாட்டுத் தலைவனாகக் குறித்துள்ளார். இங்கு மலை என்பது கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மதுராந்தகத்திற்கு வடக்கே உள்ள குன்றுப் பகுதியைக் குறிக்கும். எனவே எயிற்பட்டினம் கடற்கரை ஊர் என்பதுடன் மலைப்பகுதியைச் சார்ந்ததுமாகும். உ.வே.சா. அவர்கள் குறித்த நீர்ப்பேர் என்னும் ஊரும் மதுராந்தகத்தை அடுத்தது.

இங்கு கண்டவற்றுள் எயிற்பட்டினம், மதிலாற் பெயர் பெற்ற தென்பதும் மலைப்பகுதி சார்ந்த தென்பதும் அழுத்தமாக நினைவிற் கொள்ள வேண்டியனவாகும்.

பட்டினம் என்று அடைமொழியின்றிக் கூறப்பட்டால் அது புகார் என்று காவிரிப்பூம்பட்டினத்தையே குறிக்கும் என்னும் முடிவான கவனத்துடன் முன்னே விட்ட இடத்தைத் தொடர்வோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/38&oldid=584920" இலிருந்து மீள்விக்கப்பட்டது