பக்கம்:நாகப்பட்டினம்.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.68 நாகபட்டினம்

அண்மையில் நேர்ந்த பெருமழையால் ఊFTTడరnశుః5T அலைகளாகியுள்ளன. இவைபோன்று பெருங் குறையான நிலையில் இன்றைய நகரமைப்பு நிலையும் அதன் போக்குவரத்து நிலையும் உள்ளன. - நாளைய நகரமைப்பு

நகரமைப்பில் கடைத்தெரு எவ்வகையிலேனும் சிறகத்திற்கு 2 அடி அளவாவது விரிவாக்கப் பெற வேண்டும். நகரமைப்புக் கட்டடங்களாகவோ அலுவலகக் கட்டடங்களாகவோ காடவர்கோன் பாடிக்கும் நாகூர்க்கும் இடைப்பட்ட இடத்தில் உள்ள வெளிகள், கொல்லைகள், வளாகங்கள், தோப்புகள் முதலிய இடங்களில்தாம் அமைக்கும் வாய்ப்பிருக்கிறது. அதனை நகரமைப்புக்கேற்ற வடிவமைப்புக்கொண்டு அதன்படி அமைக்க முனைய வேண்டும். அமைந்துள்ள புறநகர்ப் பகுதிகளில் தெரு, தெருவிளக்கு, குடிநீர் இவற்றிற்கு வேண்டியவற்றைச் சரிசெய்ய அவற்றிற்குத் தடையாக உள்ள விதிகளைத் தளர்த்த வேண்டும். நகராட்சி இவற்றில் கவனம் கொள்ள வேண்டும்.

தொழிலாலும், அதன் தொடர்பான வணிகத்தாலும், நாகை நகர் பெருகவும், வளரவும் நகர்க்கு நகரமைப்பு துணையாக வேண்டிய இன்றிமையாத சூழல் உள்ளது. இச்சூழல் செம்மையாகி நாளைய நாகையின் நகரமைப்பு சீராக அமைந்தாக வேண்டும்.

சீரமைப்பு ஏழு

குறிப்பாக ஏழு இடங்கள் நாகையிலும், இரண்டு இடங்கள் நாகூரிலும் சீரமைக்கப்பட வேண்டும். - r

4

நாகையில் ஒன்று

புகைவண்டி நிலையம் புகுவாயில் இடத்திலிருந்து மேற்கே செல்லும் பேருந்துச் சாலையை ஒட்டித் தெற்குச் சிறகத்தில் நீளமாக புகைவண்டித்துறைக் குடியிருப்புக்கள் உள்ளன. இவ்விடங்களின் கொல்லைகள் பெரும் பயனின்றி உள்ளன. இவற்றைப் புகைவண்டித் துறையினரிடமிருந்து 20 அடி அகலத்திற்கேனும் வேண்டிப் பெறலாம். பெற்று அங்கு வாடகைச் சீருந்துகள் (Taxi, Pleasure cars) porp. &#60 Gurăsălăsir (Auto Rickshaws), மிதியிழுப்பு வண்டிகள் (Cycle Rickshaws) குதிரை, மாட்டு வண்டி கள் ஆகியவை நிற்கச் சீரான கொட்டடி அமைக்கலாம். இதனால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/386&oldid=585273" இலிருந்து மீள்விக்கப்பட்டது