பக்கம்:நாகப்பட்டினம்.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 நாகபட்டினம்

ளைப் பெற வேண்டும். ஏழாவது சீரமைப்பை அடுத்தடுத்து வரும்

மய நாகைப் பகுதியில் காண்பது பொருத்தமாகும். -

நாகூரில் இரண்டு சீரமைப்புகள் நேர வேண்டும். ஒன்று

தர்காவிற்குச் செல்லும் கடைத்தெரு அகலமாக்கப்பெற வேண்டும். புறநகரில் கடைகள் தெர்குப்பாக ஒரு பெரும் வளாகத்தில் அமைதல் வேண்டும். பல்வகை நுகர் பொருள்கள் கலைப் பொருள்கள், அணி பொருள்கள் எனக் கவர்ச்சிக்குரிய பொருள்களைக் கொண்ட கலை வளாகம் அமைய வேண்டும். இரண்டு

நகரின் புறத்தே புகுவாயிலிடத்தில் அளவான வாய்ப்புகள் கொண்ட அறைகளுடன் கூடிய தங்கும்விடுதி அளவான கட்டணத்தில் வழங்கும் திட்டத்தில் அரசால் எழுப்பப்பெற வேண்டும். நகராட்சியே * இதனைச் செய்யலாம். பயணிகளுக்கும் பேருதவி யாகும்; நாகூர் நகரமைப்பிற்கும் துணையாகும்; வருவாயும் கிட்டும்.

உ. மக்கள் நாகை

இன்றைய மக்கள்

"மண்ணுக்கு ஒரு குணம் உண்டு என்பர். இங்குக் குணம் என்றதும் சுவையை அன்று: விளைச்சலையும் அன்று: வன்மை மென்மையாம் தன்மைகளையும் அன்று. தன்பால் தன்னை மதித்து வாழும் மாந்தருக்குக் குணத்தை ஏற்றுங் குணம். இக்குணம் நல்ல தாகவும் இருக்கலாம். தீயதாகவும் இருக்கலாம்; திருப்பூந்துருத்தி விருந்தோம்பல்', 'கருப்பூர் மத்திசம் என்ற வழக்குகள் இதனை அறிவிப்பனவே.

'அந்த மண்ணில் பிறந்தவனா அடாதவன்' என்றும், 'மருது ரான் மறந்தும் பொய் சொல்லான் என்றும், அந்த ஊரானா அவன் ஒரு மாதிரி என்றும் சொல்லப்படுவன எல்லாம் முழு உண்ம்ை யாகா. ஒவ்வொருகால் நேர்ந்ததை வைத்தும், செப்புவார்தம் விருப்பு வெறுப்பைக் கொண்டும் அவ்வாறெல்லாம் சொல்லப்படுகின்றன.

நாகையில் "நல்லார், பொல்லார் அல்லார்" என்று சம்பந்தர் பாடினார். எங்கும் இன்னோரெல்லாம் உள்ளனர். இங்கும்

இருக்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/388&oldid=585275" இலிருந்து மீள்விக்கப்பட்டது