பக்கம்:நாகப்பட்டினம்.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3亨2 நாகபட்டினம்

புலமைக் காய்ச்சலின் நிழல் ஓரளவில் உண்டு. ஆனால் புலமைத்திமிர் பெருமளவில் இல்லை. புகழ் வேட்டை பெருமளவில் இல்லை. இடைத்தரகர் எங்கும் போல் இங்கும் உள்ளனர். பொதுவில் நன்மக்கள்; சிறப்பில் பொன்மக்கள்.

இவையாவும் இதனை எழுதுகின்றவன் 27 ஆண்டுகள் நாகையில் வாழ்ந்து, பழகியறிந்த உணமைகள்.

இன்றைய நாகை மக்களின் அமைதி எத்தகையது? முழுமையும் அமைதி என்று எழுதிவிட முடியாது. ஆரவாரச் சூழலால் அமைதிக்கு இடையூறும் உண்டு. நாகூர் தர்காக் கந்தூரி விழா, வேளாங்கன்னி விழா, நாகை மாரியம்மன் கோவில் திருவிழா என ஒவ்வொன்றும் பத்துப் பதினைந்து நாள்களும் அவற்றிற்கு முன் நாள்களும் பின் நாள்களுமாக ஆண்டில் மூன்று திங்கள் ஆரவாரமான திங்கள்கள். போக்கு வரத்தால், நெரிசலால், பொருள் பற்றாக் குறையால், விலை யேற்றத்தால் அமைதிக்கு இடையூறு தான். ஆயினும் காட்சி, பொழுது போக்கு வழிபாட்டு வாய்ப்பு என்பவனவற்றால் இவ்விடையூற்றின் வலு குறைந்து காணப்படும்.

"நாகையில் பிறக்க முத்தி என்று ஆன்ம அமைதி கொள்வோர் சிறு எண்ணிக்கையர். நாகூர் ஆண்டவர் மேல் நகராத நம்பிக்கை கொண்டோர் பெரும் இசுலாமிய எண்ணிக்கையர். நர்ளும் நீறணிந்து வாழ்வோர் மிகுதி. திருமண் இடுவோர் குறைவு. நாளைய மக்கள்

இவ்வாறான இன்றைய நிலை நாளை எவ்வாறு தொடரும், நீளும் என்பது பொறுத்துப் பார்த்துத்தான் நம்ப வேண்டி யிருக்கிறது. ... " -

இனப்பூசல், சாதிப்பூசல் வர வழியில்லை; வரக் கூடாது. சமயப் பூசல்...? ஆம் புள்ளி வைத்து வினாக்குறி போட வேண்டியுள்ளது. முன்னர் குறித்தது போல் புதிதாக முளைத்துள்ள "மதமான பேய்" வெளியிலிருந்துதான் வந்து கவ்வப் பார்க்கிறது. மக்கள் புறங்காண வேண்டும் காண்பர். இதற்கு இரண்டு நிகழ வேண்டும். பொது நிலைப் பேரவை

ஒன்று: நாகை நகரில் பொது நிலைப் பேரவை அமைக்கப் பெற வேண்டும். இஃது இலக்கியம், குமுகாயம் இரண்டிலும் பொது நோக்குக் கொண்ட கருத்தை முன்வைத்துத் தொடர்ந்து இயங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/390&oldid=585278" இலிருந்து மீள்விக்கப்பட்டது