பக்கம்:நாகப்பட்டினம்.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374 ‘. நாகபட்டினம்

தக்கவை மிக அருகியவையே. நாகூர், வேளாங்கன்னி வழக்கம் போல் விழாக்களைக் கொள்கின்றன.

நாளைய சமயம் . .

இதே சிறப்பில் நாளைய சமய நிலை நிகழ்வதே போதுமானது. புதுமுனைப்புகள் மக்களுக்கு இடையூறான பாடுகளை (பிரச்சினைகளை) உண்டாக்கக்கூடும். - -

நாகை, நாகூர் இரண்டையும் கூட்டிச் சமயப் பொதுநிலை கொள்வதே நாளைய முயற்சியாக இருக்க வேண்டும். பேய்க்குளம் தாய்க்களம்

நாகையில் ஒன்று அமைக்கப்பெறலாம். அது முன்னர் நாளைய நகரமைப்புப் பகுதியில் எழுதப்படாமல் இப்பகுதிக்கு ஏற்றி வைக்கப் பெற்ற ஏழாவது பிரிவாகும். -

நாகையில் நீலா கீழ வீதியிலிருந்து கடற்கரைக்குச் செல்லும் சாலையில் பேய்க்குளம் என்று ஒன்று உள்ளது; இது பயனில் இல்லை. ஓரளவு பரப்பளவு கொண்டது. அதுகுறித்து ஒர் உரிமைப் பூசல் இருந்து பின்னர் அது தீர்க்கப்பட்டு இசுலாமிய நிறுவனப் பங்கில் தற்போழ்து உள்ளது. அதனை பெருமனங்கொண்டு ஒரு பொதுப் பயன்பாட்டிற்குக் கொணரலாம்.

அஃது அங்கு ஒரு பொதுக்கூடம் வாய்ப்பான அமைப்புகளுடன் எழுப்பப்படுவதற்குரிய இடமாகும். இலக்கியம், குமுகாயக் கல்வி, மருத்துவம் முதலிய பொதுநலன்களுக்குப் பயன்படும் அளவில் ஒரு கலை மன்றக் கூடம் கட்டப்பட வேண்டும். அனைத்து வகைத் திருமணங்கள் வரவேற்புகள் சிறப்புக் கூட்டங்கள் இவற்றிற்கு வாட கைக்கு அளவான கட்டணத்தில் விடப்படலாம்.

இசுலாமியப் பெருமக்கள் இதில் மனம் பற்றி ஏனைய மக்கள் ஒத்துழைப்பையும் பொருளுதவியையும் கொண்டு இதனைச் செய்தால் மக்களின் பொதுநலனுக்கு மட்டுமன்றிச் சமயப் பொதுமைக்கும் நலமாகும். இது சமயப் பொதுமைச்சின்னமாகவும் திகழவேண்டும். இதன் உரிமை, ஊதியம், யாவும் இப்போது அதனைக் கொண்டுள்ளோர்க்கே 346Ծ*Լքա6ծուb. இதனால் பேய்க்குளம் தாய்க்களம் ஆகும்.

எல்லாவகையிலும் நாகையின் நாளைய சமய நிலை பூசலுக்கு இடந்தராமல் அமைவதே நலம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/392&oldid=585281" இலிருந்து மீள்விக்கப்பட்டது