பக்கம்:நாகப்பட்டினம்.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

375

ξΣΥΓο ഖങ്ങില, தொழில் நாகை

இன்றைய வணிகம்

கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டளவில் நாகை பெற்றிருந்த வணிகத்தை ஒப்பிட்டால் இன்றைய வணிகம் வளர்ச்சி பெற்றதன்று. உள்நாட்டு வணிகமும் உள்நகர வாணிபமும் கடைகள் எண்ணிக்கையில் பெருகியிருக்கலாம். ஆனால் வெளிநாட்டு ஏற்றுமதி. இறக்குமதி மிகக்குறைவே. இருபது ஆண்டுகட்கு முன்னர் நிகழ்ந்ததைவிடக் குறைந்துள்ளமை கண்கூடாகும். -

இருப்பினும் கால் நூற்றாண்டு அரைநூற்றாண்டளவில் - ஒன்றிரண்டு ஒரு நூற்றாண்டளவிலும் நாகை முதற் கடற்கரை, இரண்டாம் கடற்கரைச் சாலைகளில் பண்டசாலைகளை அமைத்து இன்றும், அவற்றைத் தொடர்ந்து நடத்துவோரும் உள்ளனர். அண்ணாச்சி திரு அ.து. செயவீரபாண்டிய நாடார், ஏசியா கார்ப்ப ரேசன் திரு அண்ணாமலை, திரு இப்று சமாலுத்தின், திரு நடராச செட்டியார், திரு கோபால கிருட்டின பிள்ளை, திரு ந. சொக்க லிங்கம், திரு முருகேசன் முதலியோரும் மற்றும் சிலரும் அமைதியாக இவற்றைச் செய்து வருகின்றனர்.

பத்தாண்டுகளாக வளர்ந்து வரும் மீன் வணிகமும் குறிக்கத்தக்கது. கடல் விளைச்சலாம் விதைக்காத அறுவடை மீன்பெருக்கம். நாகைக் கடலில் பல்வகை மீன்கள் பிடிக்கப்படுகின்றன. இவற்றுள் நல்ல வணிகத்தில் குறிக்கப்பட வேண்டியது இப்போது இறால் மீன் வணிகமாகும். இதில் 21 வகை கள் உள்ளன. இவ்வகைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வகைகள் அமெரிக்கா, பிரான்சு, சப்பான் நாட்டாரால் விரும்பி உண்ணப்படு பவை. நாகை இறால் பெருமளவில் இந்நாடுகளுக்கு ஏற்றுமதி யாகிறது. • - -

இதனால் வெளிநாட்டு வருமானம் ஆண்டு ஒன்றிற்கு 800 கோடி உருவாவாகச் செலாவணி கொண்டது. இதில் ஒரு பகுதி நாகை இறால் ஏற்றுமதியாகும்.'

1. மீன்கள் பற்றிய விவரங்களை உதவியவர் திரு பொன். பழனிவேல் அவர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/393&oldid=585282" இலிருந்து மீள்விக்கப்பட்டது