பக்கம்:நாகப்பட்டினம்.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்று - நாளை - நாகை 3.81

ஆங்கிலக் கல்வியால் சட்டம், பொறியியல், மருத்துவம், அலுவற்கல்வி, கணக்காய்வு, மேலாண்மைக் கலைக்கல்வி (M.B.A) எனப் பெருகியுள்ளன. நாகை இவற்றில் பங்கு பெற்றுள்ளது. வழக்கறிஞர்கள் நூற்றுவராகியுள்ளனர். மருத்துவர், பொறியாளர் எண்ணிக்கையும் நன்கு உள்ளது.

ஆயினும் நாகை மண் மைந்தராய் இந்திய அரசுப் பணி (IAS) இந்தியக் காவற்றுறைப் பணி (I.P.S.) ஆகியவற்றில் கற்றுயர்ந்தவர் எவரும் அமையவில்லை. இஃது ஒரு குறையே. . நாளைய கல்வி

வருங்காலத்தில் நாகையில் வளர வேண்டிய கல்வியும், தோன்ற வேண்டிய கல்வி நிலையங்களும் குறிக்கப்பட வேண்டியன.

நாகை மேனிலைப்பள்ளிகளில் பயின்ற ஆண்கள் ஆண்டிற்கு 150 பேர் கல்லூரிக் கல்விக்காக வெளியூர் செல்கின்றனர். இவர்கட்கும் சுற்றுப்புற மாணவர்க்குமாக ஒரு கலைக்கல்லூரி அமைய வேண்டும்.

இன்றியமையாதனவாக ஒரு பொறியியற் கல்லூரியும், ஒரு வணிகவியல் பயிற்சிக் கல்லூரியும் ஒரு மீன் ஆய்வு வளர்ப்புக் கல்வி நிறுவனமும் அமைக்கப் பெற வேண்டும். மூனறு ஐரோப்பிய அறிஞர் அறிவித்துள்ளமைக்கு ஏற்ப பயிர்ப்பண்ணைப் பல்லைக்கழகம் (Faா பாiversity)ஒன்று ஏற்பட வேண்டும். படகு கட்டும், இயக்கும் பயிற்சி நிலையம் ஒன்றும் ஏற்பட வேண்டும். தமிழ் இலக்கிய இலக்கணக் கல்வி தொடரவும் பெருகவும் தமிழ்க்கல்லூரி ஒன்று தோன்ற வேண்டும். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தமிழ்க்கல்லூரி தனியாக அமையப் புது விதி அமைக்கபெற்றுள்ளது. இதனைப் பயன்படுத்திப் புதுப்பிக்கப் பெற்றுள்ள நாகைத் தமிழ்ச் சங்கம் இப்பணியை மேற்கொள்ளலாம். ஒய்வு பெற்றுள்ள புலவர் இரா. இராசு அவர்களும் ஏனைப் புலமை நண்பர்களும் தமிழ் ஆர்வப் பெரியோர்களும் இதற்கு முனையலாம்.

இவ்வாறெல்லாம் நாகை ஒரு சிறந்த கல்வி மாவட்டமாகவும் கற்றோர் பயிலும் மாவட்டமாகவும் கற்றோரை வழங்கும் மாவட்டமாகவும் உய்ர்வு பெற வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/399&oldid=585290" இலிருந்து மீள்விக்கப்பட்டது