பக்கம்:நாகப்பட்டினம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 - நாகபட்டினம்

ஆனால் உண்மை அதற்கு அப்பால் உள்ளது. அதற்குச் சிறு பாணாற்றுப்படை "மதிலொடு பெரிய... பட்டினம்" என்று எயிற் பட்டினத்தை வண்ணிக்கும் பகுதியைக் காணவேண்டும்.

மதிலொடு பெயரிய பட்டினத் தில்

தாழை, செருந்தி, முண்டகம், புன்னை பூத்திருக்கும்.

"கானல் வெண்மணற் கடலுலாய் நிமிர்தரப்

பாடல் சான்ற நெய்தல் நெடுவழி

மணிநீர் வைப்பு மதிலொடு பெயரிய

பனிநீர்ப் படுவிற் பட்டினம்" (13) என்று எயிற்பட்டின அறிமுகம் உள்ளது. அதாவது,

நல்லியக் கோடனைப் பாடிய பாடலால்

புகழ்பெற்ற பட்டினம்;

கடற்கரைப் பகுதியாகிய நெய்தல் நிலத்து

நீண்ட வழியில் உள்ள பட்டினம்;

நீலமணிபோன்ற கழிகள்

சூழ்ந்த பட்டினம்;

மதிலாலே பெயர்பெற்ற பட்டினம்;

குளிர்ந்த நீரைக் கொண்ட குளங்களையுடையபட்டினம்;

தொடர்ந்து

ஒட்டகத்தைப் போன்று வரும் அலைகளை

யுடைய பட்டினம்; .اید

அவ்வலைகள் கொண்டு வந்து தள்ளும்

அகில் விறகாலே நெருப்பு மூட்டி அப்பகுதிப்

பரதவப் பெண்கள் கள்ளைச் சமைக்கின்ற

பட்டினம் - என வண்ணனை நிறைவேறுகின்றது. இவ்வண்ணனையை நோக்கினால் எயிற்பட்டினம் கடற்கரை ஊர் என்றறியலாமேயன்றிப் போக்குவரத்துடைப் கடல் துறைமுகம் கொண்ட்து என்றோ, வெளிநாட்டுப் பொருள்கள் வந்திறங்கி, உள்நாட்டுப் பொருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/40&oldid=584922" இலிருந்து மீள்விக்கப்பட்டது