பக்கம்:நாகப்பட்டினம்.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்று - நாளை - நாகை 383

வேண்டும். நாகைத் தொகுதிச் சட்டப் பேரவை உறுப்பினரையும், நாடாளுமன்ற உறுப்பினரையும் முடுக்கிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் அரசியல் வேண்டியதில்லை. அமைதியியல் நிறைய வேண்டும். தேர்தல்களை அணுக வேண்டியதுமில்லை. அணுக விட வேண்டியதுமில்லை. -

நாகைப் பெருமக்கள் கவனத்திலும், முயற்சியிலும் நடைமுறையிலும் கொள்ள வேண்டிய இன்றியமையாத கடமை. இக்கடமை மேலும் மேலும் பெருகலாம். நிறைவடையும் - நின்றுவிடும் கடமை அன்று. இதனைக் குறிக்க வேண்டியது நிறைவுரையின் கடமையாயிற்று.

. நாளும் வாழ்க! நகரத்தின் நலங்கருதி

நன்னோக்கே முதலீடாய் நயந்து கூடி, நுகரத்தான் மக்கள் உளார்.

நுகர்த்தத்தான் ஆட்சியென நுன்று துண்டி நகரமக்கள் பேரவைதான்

நடைபோடும் நல்லமைப்பாய்

- நாட்டம் கொண்டு

பகரத்தான் நாங்கள் உள்ளோம்

என்பதன்றிப் பணிசெய்து பணைப்பாய் வாழ்க. நாகபட் டினமென்றும்

நாட்டிலொரு பட்டினமாய் நலத்தில் வாழ்க! நாகபட்டினம் தொழில்கள்

நாட்டியொரு பெருவளத்தில் நயந்து வாழ்க!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/401&oldid=585293" இலிருந்து மீள்விக்கப்பட்டது