பக்கம்:நாகப்பட்டினம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்று நாகை 23

ஏற்றுமதியாகும் துறைமுகம் என்றோ, கலங்கள் - நாவாய்கள் நிற்கும் பட்டினம் என்றோ ஒரு குறிப்பும் இல்லை. அவ்வாறிருந் திருப்பின் கட்டாயம் ஒர் அடியேனும் பாடப்பட்டிருக்கும்.

எனவே, எயிற்பட்டினம் துறைமுகம் கொண்ட பட்டினம் அன்று

என்பதைத் துணிவாகக் கொள்ளலாம். -

ஆனால்,

உருத்திரங்கண்ணனார் இளந்திரையனைப் பாடிய பெரும் பாணாற்றுப்படையில் குறிக்கப்படும் பட்டினமும் அவரே கரி காலனைப் பாடிய பட்டினப்பாலையில் குறிக்கப்படும் காவிரிப் பூம்பட்டினமும் ஒன்றிய கருத்துடையனவாக விளக்கப்படுகின்றன. அவற்றை இவ்வாறு ஒப்பிட்டுப் பட்டியலிட்டுக் காணலாம்.

பட்டினம் பெரும்பாணாற்றுப்படை

. "நாவாய் சூழ்ந்த நளிநீர்ப் படப்பை" (அடிஎண் 321) "வாலுளைப் புரவியொடு வடவளந் தரூஉம்" (320) . "பைங்கொடி நுடங்கும் பலர்புகு வாயில்" (337)

"முத்த வார்மணல் பொற்கழங் காடும்" (335)

.

. "நெல்லுழு பகட்டொடு கறவை துள்ளா" (325)

பட்டினப் பாலை

1. "தீம்புகார்த் துறைமுன்றுரைத் தூங்கு நாவாய்" (அடிஎண்

173, 174) -

2. "நெல்லோடு வந்த வல்வாய்ப் பஃறி" (30) 3. "நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்" (135)

. "வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்" (187)

. "நறவு நொடைக் கொடியொடு" (180)

. "வலையுணங்கு மணல் முன்றில்" (83)

"காய்ச்செந்நெற் கதிரறுத்து மோட்டெருமை முழுக்குழவி' (1 3, 14)

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/41&oldid=584923" இலிருந்து மீள்விக்கப்பட்டது