பக்கம்:நாகப்பட்டினம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்று நாகை 25

எனவே, இரண்டு பாட்டுகளிலும் பட்டினம் என்று வருவது காவிரிப்பூம்பட்டினமே என்றாவதால் பெரும்பாணாற்றுப்படைப் பட்டினமும் காவிரிப்பூம்பட்டினமேயாகின்றது.

இவ்விரண்டைப் பற்றிய வண்ணிப்பு ஒன்றித்துள்ளன, என்பதை உ.வே.சா. அவர்களும், நீர்ப்பெயற்றெல்லையை விளக்கும் போது, -

"நீர்ப்பெயற்றென்னும் ஊருக்கருகிலுள்ள பட்டினம் (பெரும்பாணாற்றுப்படைப்பட்டினம்) காவிரிப்பூம்பட்டினம் (பட்டினப்பாலைப் பட்டினம்) என்னும் இரண்டு கடற்கரைநகர்களைப் பற்றிக் கூறுவனவற்றுள் பல பகுதிகள் ஒன்றிய கருத்துள்ளன". (14) என்றும் ஒத் துள்ளமையைக் காட்டியுள்ளார்.

ஆனால், பட்டினப்பாலைப் பட்டினத்தைக் காவிரிப்பூம்பட்டினம் என்று குறித்தவர் பெரும்பாணாற்றுப்படைப் பட்டினத்தை எது என்று குறிக்காமல் பட்டினம் என்று பொதுவாகவே குறித்தார். இது கொண்டு, உ.வே.சா. அவர்கள் பெரும்பாணாற்றுப்படையில் வரும் பட்டினம் காவிரிப்பூம்பட்டினம் என்று கொள்ள மனங்கொள்ள வில்லை என்றே படுகின்றது. -

இதற்குக் காரணம் அவர் நீர்ப்பேர் என்னும் ஊர் நீர்ப்பெயற்று' என்னும் ஊராக இருக்கலாம் என்று கருதியதேயாகும். அந்த 'நீர்ப்பேரைத் தாண்டி வடக்கே காவிரிப்பூம்பட்டினம் இல்லாமை யாலும் அவ்வாறு இரண்டுமற்ற நிலையில் விட்டார். நீர்ப்பேர் அன்று

வேறோர் அமைவையும் &sióðūT வேண்டும். இரண்டு பாட்டுகளுக்கும் உரை எழுதிய நச்சினார்க்கினியரும் இரண்டு இட விளக்கங்களிலும் காவிரிப்பூம்பட்டினம் என்று விரிக்கவில்லை. இது கொண்டு நச்சினார்க்கினியரும் பெரும்பாணாற்றுப்படைப் பட்டினம் காவிரிப்பூம்பட்டினம் என்று குறிக்க மனங்கொள்ள வில்லையோ, அன்றிப்பொதுவிற் பட்டினமென்றாலே காவிரிப்பூம் பட்டினம்தானே என்ற கருத்தாலோ எழுதினார் என்று விடலாம்.

நாம் இக்கருத்தோட்டத்தோடு உ.வே.சா. குறித்த நீர்ப்பேர் என்னும் ஊரைத் தாண்டிக் காஞ்சிபுரம் செல்லும் வழியை நோக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/43&oldid=584925" இலிருந்து மீள்விக்கப்பட்டது