பக்கம்:நாகப்பட்டினம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 நாகபட்டினம்

இஃது எல்லை என்றால் இதனை எல்லையாகக்கொண்ட 'நீர்ப்பெயற்று' என்றது எதனை? அது பரவை என்னும் சிற்றுாரை எல்லையாகக் கொண்ட இன்றைய நாகர்பட்டினம் என்றாகின்றது. உரையாசிரியர் நச்சினார்க்கினியர், நீர்ப்பெயற்றெல்லை என்பதற்கு,

"நீர்ப்பெயற்று என்னும் ஊரின்" எல்லையிலே போய்" (17) என்று ஒர் ஊரின் பெயராகவே நீர்ப்பெயற்றைக் குறித்தார்.

எனவே, இன்றைய நாகர்பட்டினம், நாகர்பட்டினம் என்று பெயர் பெறுவதற்கு முன்னர் "நீர்ப்பெயற்று" என்னும் காரணப் பெயர் பெற்றிருந்தது என்று ஒரு வரலாற்று முடிச்சை அவிழ்த்துத் தெளிவு கொள்ளலாம்.

இந்த நீர்ப்பெயற்று, நாகர்பட்டின வரலாற்று நிகழ்வின் நான்காவது கல்.

இந்தக் கல்லின் காலம் கடைச்சங்க காலத்திற்கு முந்தியது. கடைச்சங்க காலத்தைக் கி.பி. இரண்டாம் நூற்றாண்டளவாக ஒரளவில் வரையறுத்துக் கூறி வருகின்றோம். கடைச் சங்க நூல் களில் உள்ள பாடல்கள் ஒரு காலத்தவை அல்ல. சில நூற்றாண்டுகள் அளவில் கூட இடைவெளி கொண்டவையாகலாம். கடியலூர் உருத்திரங்கண்ணனாரை வைத்துக் கரிகாலன், இளந்திரையன் தொடர்புடன் காணும்போது இவ்விருவர் காலநீட்டமாகிய கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதி தொடங்கி கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியின் காலம் என்று கொள்ள வேண்டும், -

இக்காலத்திற்கு முன்னரே பல்லாண்டுகள் நீர்ப்பெயற்று' என்னும் பெயர் வழக்கில் இருந்திருக்க வேண்டும். எனவே, கி.மு. ஒன்று அல்லது அதற்கு முற்காலம் இந்த நான்காவது கல்லின் காலம் 6T65Teustib.

ஊடாட்டம்

அடுத்து ஒர் இடைநிகழ்வு ஒரு கல்லாகிறது. இலக்கியத்தில் பதிவுபெற்ற தகுதியில் பேரூராக, நீர்ப்பெயற்று' என்ற பெயர் பெற்றிருந்த நாகர்பட்டினம் அதே காலத்தில் புத்தத் துறவிகள் இருக்கைத் தொடர்பில் பதரி திட்டை' என்னும் பெயரையும் கொண்டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/46&oldid=584928" இலிருந்து மீள்விக்கப்பட்டது