பக்கம்:நாகப்பட்டினம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 Ö நாகபட்டினம்

முனைத் தோற்றமாக இருந்த நீர்ப்பெயற்றில் - பதரி திட்டையில்-நெகமாவில் இடம்பெற்றதை முன்னரே கண்டோம். இந்நிகழ்வுதான் இப்பேரூர் ஒரு நகரமாகவும், பட்டினமாகவும் வளர வழி வகுத்தது.

இலக்கியங்காட்டிய நீர்ப்பெயற்று ஒர் அறிகுறிப்பெயராகவும், பதரி திட்டை ஒரு சமயக்குறியீடாகவும், நெகமா ஓரினத்தார் குறியீடாகவும் மும்முனைப் பெயர் வழக்கில் இருந்த போது புகாரினின்று குடிபுகுந்த பல்வகையினரும் இங்கு நாகர்கள் மிகுந்து வாழ்வதைக் கண்டு நாகர் ஊராக - நாகரூராகக் (நாகூராக) கண்டனர்.

ஏ. பட்டின அழிவும் பயணிகள் குறிப்பும் காவிரிப்பூம்பட்டினம் கடற் கொந்தளிப்பால் அழிந்தமையே நாகர் ஊர் - நாகர்பட்டினமாக உருவாக மூல காரணமாயிற்று.

அக்கடற்கொந்தளிப்பின் காலம் எது? பட்டினமானதன் தொடர்பு என்ன? எவ்வமைப்பில் வளர்ந்தது? + கடற்கொந்தளிப்பால் புகார் கடலுள் மூழ்கிய காலத்தைக் கணிக்க அப்பட்டினம் எவ்வெக் காலம் வரை வளமாக விளங்கிற்று என்பதைக் காலப்படியாகக் காணல் வேண்டும்.

இதற்கு ஒரளவில் தமிழ் இலக்கியங்கள் துணை நிற்கின்றன. பெருமளவில் வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்பேடுகளே கைகொடுக்கின்றன.

சங்க இலக்கியங்களாகிய பத்துப்பாட்டு எட்டுத்தொகையின் பாடற்கருத்துக்களை அவற்றின் மிக முற்பட்ட கால எல்லையாக ஏறத்தாழ கி.மு. முதல் நூற்றாண்டளவாகக் கொள்ளலாம். தொகுக்கப்பெற்ற காலம் கி.பி. ஆயினும் முற்கால - ஒரளவில் பழங்காலப் பாடல்களும் இணைந்திருக்கும் என்ற வகையில் கி.மு. முதல் நூற்றாண்டளவிற்குச் செல்லலாம்.

இடையில் ஒரு பெயர்க்குறிப்பு.

காவிரிப்பூம்பட்டினம் என்றும் பெயர் (காவிரிப்பூம்பட்டினம் என்பது பெருவழக்காய்விட்டமை கொண்டு இங்கும் இப்பெயரிலேயே எழுதப்படுகின்றது) சங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/48&oldid=584930" இலிருந்து மீள்விக்கப்பட்டது