பக்கம்:நாகப்பட்டினம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்று நாகை 31

இலக்கியங்களில் காவிரிப்பூம்பட்டினம் என்ற வழக்கு இல்லை. அகநானூற்றில் காவிரிப்படைப்பைப் பட்டினம் என்றுதான் குறிக்கப்படுகின்றது. சிலப்பதிகாரத்திலும் அப்பெயர் இல்லை. ஒரிடத்தில் அகநானூற்றைப் போன்று "காவிரிப்படப்பைப் பட்டினம்" (19) என்றுள்ளது. மணிமேகலையில் காவிரிப் பூம்பட்டினம் (20) என்று ஒரிடத்தில் உள்ளது. -

கடைச்சங்க நூல்களாகத் தொகுத்த பாரதம் பாடிய பெருந் தேவனார் புலவர் பெயர்களைக் குறித்த இடங்களில் அவரவர் ஊர் களையும் அடைமொழியாக வைத்துக் குறிப்பிட்ட மரபில்,

"காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் (புறம்) "காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார் (நற்றிணை) "காவிரிப்பூம்பட்டினத்துக் கந்தரத்தனார் (குறுந்தொகை} "காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தங்கண்ணனார் (குறுந்தொகை)

GT6Grås sõnastur[&#TL/Tft. -

ஆறு கடலுள் புகுந்து நிறைவடையும் கடல்துறை நகரமுகம் "புகார் எனப்படும். இது புகு + ஆர் - புகுந்து நிறைவடைதல் என்னும் பொருள் கொண்டது. இது பொதுப்பெயர். ஆயினும் சிறப்பாகக் காவிரிபுகும்பட்டினத்தையே குறித்தது. பட்டினப்பாலை யிலும், சிலம்பிலும். மணிமேகலையிலும், புகார் என்னும் பெயரே காவிரிப்பூம்பட்டினத்திற்குக் குறிக்கப்பெற்றுள்ளது.

ஆனால், நாட்டு வழக்காகக் காவிரிப்பூம்பட்டினம் என்னும் பெயரே இருந்துள்ளது. அதனால்தான் வெளிநாட்டுப் பயணிகள் 'காவிரிப்பூம்பட்டினம் என்று கேள்வியுற்றதைக் கொண்டு தம் மொழி ஒலிப்பில் "காபேரிசு", "காமரா" என்றெல்லாம் குறித்தனர்.

நக்கீரர், இந்நகரைப் "பெரும்பெயர்க் காவிரிப் படப்பை" (21) என்று சிறப்பித்துள்ளார். சிலப்பதிகாரமும், மணிமேகலையின் முற்பகுதியும் இந்நகரின் வளப்பமான நிலையைப் பாடியுள்ளன.

அசோகர் மகன் மகேந்திரன், இந்நகரில் ஏழு விகாரைகளை அமைத்தான். அவன் காலத்தில் அஃதாவது அசோகர் காலமாகிய கி.மு. 260 அளவில் இந்நகர் வளமார்ந்திருந்தது. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/49&oldid=584931" இலிருந்து மீள்விக்கப்பட்டது