பக்கம்:நாகப்பட்டினம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்று நாகை - 33

குறிப்பாகிய கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இடைப் பகுதியையே காண்கிறோம். -

முதல் பழுது -

அறிஞர் பிளினி தம் வாழ்வின் இறுதியாண்டாகிய கி.பி. 79 இல் குறித்த குறிப்பு ஒன்று காவிரிப்பூம்பட்டினம் கடற்கொந்தளிப்பால் தாக்கப்பட்டதைக் குறிக்கிறது. அது கி.பி. 79 ஆகட்டு 23, 24 ஆம் நாள் என்கின்றது. இது புகாரின் முழு அழிவு நாளன்று. ஒரு கடற் கொந்தளிப்பால் குமரியில் பெரும்பகுதியும் முசிறி, காவிரிப் பூம்பட்டினத்தின் ஒரு பகுதியும் தாக்கப்பட்டுப் பழுதடைந்ததையே குறிக்கும்.

இவ்வாறு மேலைப் பயணிகளின் குறிப்பிற்கேற்பத் தமிழ் இலக்கியக் கருத்துகளும் இயைந்து வருகின்றன. பட்டின அழிவும் தமிழ் இலக்கியக் குறிப்பும்

காவிரிப்பூம்பட்டினம் வளமாக இருந்ததை இறுதியாகக் குறிப்பது சிலப்பதிகாரம். மணிமேகலை காலத்தின் முற்பகுதி யிலும் வளம் காணப்படுகிறது. தெற்கே நேர்ந்த, கடல் நிலத்திற் புகுந்து மூழ்கடித்த ஒரு செய்தியைச் சிலப்பதிகாரம் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் காலமாகக் குறிக்கின்றது.

"குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள" என்னும் அடி, 'வடிம்பலம்ப நின்ற பாண்டியன் தன் பாண்டி நாட்டின் ஒரு பகுதியைக் கடற்கொந்தளிப்பால் இழந்து அதற்காகச் சோழநாட்டின் மேலும் சேரநாட்டின் மேலும் சென்று சோழ நாட்டு முத்துர்க் கூற்றத்தையும், சேரநாட்டுக் குண்டுர்க் கூற்றத்தையும் கவன்று தன் ஆட்சி நிலப்பரப்பில் சேர்த்துக் கொண்டான்' - என்பதைப் பொதிந்துள்ளது. இப்பொதிவை அவிழ்த்து வெளிப்படுத்தியவர் உரையாசிரியர் அடியார்க்கு நல்லாராவார்.(23) -

இவ்வாறு சிலம்பில் ஒரு கடல்கோள் குறிக்கப்பட்டமை போன்று காவிரிப்பூம்பட்டினத்தின் அழிவும் குறிக்கப்பட்டிருத்தல் வேண்டும். ஏனெனில், சேரன் செங்குட்டுவன் கண்ணகியார்க்கு வஞ்சி மலையில் சிலை நாட்டிக் கோட்டமெடுத்து விழாக் கொண்டாடி நிறைவேற்றிய பின் தொடர்ந்த காலக்கட்டத்தில் தான் காவிரிப் பூம்பட்டினம் கடல்கோள் நிகழ்ந்தது. இதனை மணிமேகலைக் காப்பியம் பின்வருமாறெல்லாம் விளக்குவதன் மூலம் காணலாம்.

「らT 中ー。

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/51&oldid=584933" இலிருந்து மீள்விக்கப்பட்டது