பக்கம்:நாகப்பட்டினம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்று நாகை 35

அறவண அடிகளுடன் கடல் கொந்தளிப்பில் தப்பி வருந்தாது சேரநாட்டு வஞ்சி மாநகரை அடைந்தனர். (26,27) என்றும் கூறியது. இதனைக் கேட்ட மணிமேகலை மணிபல்லவத்திலிருந்து தமிழகம் மீண்டு காவிரிப்பூம்பட்டினம் செல்லாது, கண்ணகித் தாயின் படிமத்தையும் தந்தை கோவலன் நினைவுப்படுக்கையையும் காண நேரே வஞ்சி நாட்டெல்லை வந்து கண்ணகி கோட்டமடைந்து போற்றினாள். பின்னர் அங்கிருந்து அறவண அடிகளையும் தன் தாயாரையும் காண் வஞ்சி நகருக்குள் புகுந்தாள். அவர்கள் காஞ்சி மாநகர் சென்றதை அங்கிருந்த கோவலன் தந்தை மாசாத்துவான் கூறக் கேட்டாள். - - -

இங்குப் பொருத்தமாகும் சிலம்புச்செய்தி ஒன்றை அறிய வேண்டும். கண்ணகிக்குச் சிலை நாட்டிய கோட்டத்தில் வாழ்த்தி அரற்றும் காவற்பெண்டு; "மாசாத்துவன் துறவும் கேட்டாயோ அன்னை"(28) என்றும். அரற்றும் அடித்தோழி,

"மாதவி தன் துறவும் கேட்டாயோ தோழி மணிமேகலை துறவும் கேட்டாயோ தோழி: (29) என்றும் கூறுவதாக உள்ளன. இவர்கள் துறவுகள் கோவலன் கொலையுண்ட பின்னர் அக்கொடுந்துயரத்தால் நேர்ந்தவை. இவர்கள் துறவேற்றபோது காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்தனர். அப்போது இந்நகர் அழிவுறாமல் விளக்கமாகவே இருந்தது. சோழமன்னனும் அங்கிருந்து ஆண்டான்.

இத்துறவிற்குப்பின்னர் மாசாத்துவான் வஞ்சி மாநகர் சென்றான். தன் செல்வங்களையெல்லாம் அறத்திற்கு ஈந்து புகாரில் வாழ மனமின்றி வஞ்சி சென்றான். வஞ்சியில் இவனது முன் னோன் கோவலன் என்னும் பெயரினன் புத்த சமயச் சைத்தியங் களை எழுப்பித்திருந்தான். -

சேரப் பெருமன்னனின் நண்பனாதலால் வஞ்சியில் எடுத்திருந் தான். (30) அங்கு போய் அமைதியாய் வாழ மாசாத்துவான் மனம்பற்றி வஞ்சி போனான். இங்கிவன் வந்து அமைந்த பின்னர் தான் ஒரு புத்தத் துறவியால் காவிரிப்பூம்பட்டினம் அழிவை அறிந் தான். அவனே அங்குப் பின்னர் வந்த மணிமேகலையிடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/53&oldid=584935" இலிருந்து மீள்விக்கப்பட்டது