பக்கம்:நாகப்பட்டினம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 நாகபட்டினம்

முளை தோன்றிச் செடி, மரம் பிறக்கிறது. வாழை மரத்தின் சரிவிற்கு முன்னோடியாகவே வாழைத்தார் தோன்றுகிறது. கருவின் பை உடைந்து சிதைவதால் குழந்தை பிறக்கிறது. இவ்வுண்மை களின்படியே காவிரிப்பூம்பட்டினம் அழிந்து நாகர்பட்டினம் தோன்றியதைக் காண்கிறோம்.

புகார்க் கடல்கோளால் அதன் ஆளுகை மன்னனே "ஒரு தனி யாக வெளியேறியபோது நாட்டுமக்கள் - அன்னோர் செல்வ ராயினும், வணிகராயினும், பொதுமக்களாயினும், துறவிகளா யினும் வெளியேறித் தீர வேண்டியவராயினர். வெளியேறித் தத்தம் சூழலுக்கேற்பப் பல ஊர்களுக்குச் சென்றிருப்பினும் அக்காலத்துக் குறிப்பிடத்தக்க பேரூராகத் தெற்கே 40 கி.மீ. தொலைவிலிருந்த தற்போதைய நாகர்பட்டினப் பேரூரே பலருக்கும் புகலிடமாயிற்று. காரணம், வங்கக் கடலின் கரைப்பகுதியில் ஓரளவு சிறுகலங்களில் நாகர்களின் வருகை அமைந்த சிறு துறையாக இருந்தமையே. மேலும் புத்தச் சமயத் துறவிகள் பெரும்புகழுடன் இங்கு வாழ்ந்தனர். எனவே, புகார் நகரப் புத்தத்துறவியர் இங்கு குடியேறினர். நாகர்களது வணிகச் சிறு இடமாக இருந்ததால் புகார் வணிகர் புகுந்தனர். இவர்களைத் தொடர்ந்து பொதுமக்கள் புகுந்தனர். இப்பேரூரில் ஒரளவு செல்வர் நீர்ப்பெயற்று' என்ற பெயர் கொண்டிருந்த காலத்திலிருந்தே வாழ்ந்து வருகின்றனர்.

நான்மறை ஒதும் மறையவர் குடியிருப்பு இப்பேரூரில் அமைந்து வேள்விகள் செய்ததைப் பெரும்பாணாற்றுப்படை குறிக்கிறது. இவற்றிற்கெல்லாம் மேலாக, பெருந்துறைமுகமாக விளங்கிய காவிரிப்பூம்பட்டினத்திற்குப் பின்னர் சோழ நாட்டுத் துறைமுகத் திற்கேற்ற சூழல்களை இப்பேரூர் பெற்றிருந்த இயற்கைப்பாங்கும் அடிக்காரணமாயிற்று.

மேலும் இஃதொரு குறிப்பிடத்தக்க புத்தத் திருவிடமாகவும் இருந்துள்ளது. புகாரில் புத்தமதச் சார்புடையோர் இருந்துள்ளனர். கோவலன் தந்தை மாசாத்துவான் குடும்பமே புத்தச் சார்புடையது என்று அறிய முடிகிறது. எனவே, இம்மதச் சார்பிலும் இங்குக் குடியேற்றம் நேர்ந்திருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/56&oldid=584938" இலிருந்து மீள்விக்கப்பட்டது