பக்கம்:நாகப்பட்டினம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒ. நாகர்பட்டினம்

அவ்வாறு குடியேறியோர்க்கு இங்கு வாழ்ந்த சில்வகை மக்கள் தென்பட்டிருப்பினும் ஓரளவான எண்ணிக்கையில் இடம் பெற்றிருந்த நாகநாட்டார் மிக ஈர்க்கும் நிலையில் தென்பட்டிருப்பர். ஏனெனில் நாகர் இளம் பெண்கள் கண்டால் கண்ணில் நிற்கும் கட்டழகுடையவர்: ஏன் மனத்திலும் புகும் எழில் இளமையர். இவ்வுண்மையை அடுத்து எழுதப்பெறும் பகுதியில் அறியலாம். நாகர் ஆடவரும் எடுப்பான தோற்றத்தவர். எனவே அவர்களைக் காணவும் பழகவும் நெருக்கங் கொள்ளவும் நேர்ந்திருக்கும்.

இவற்றுடன் இப்பேரூர் அப்போது எப்பெயரில் இருந்தது என்பதைக் காண வேண்டும். பதரிதிட்டா என்பது அப்போதும் புத்தமத நினைவுப் பெயர். நீர்ப்பெயற்று ஏறத்தாழ மறைந்து வரும் பெயர். குடியேறிய நாகர் தம் மொழியால் பெய்ரிட்டுக் குறித்த நெகமம். நாகானனம் என்னும் பெயர்களே வழங்கப்பெற் றிருக்கும். இவ்விரண்டிலும் நாகானனம் என்னும் பெயரே பெருவழக்காக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் பின்ன்ர் ஏறத்தாழ ஐந்தாம் நூற்றாண்டளவில் மகாகாசபதேரர் என்னும் புத்தத் துறவியார் தாம் ஒரு விகாரையை எழுப்பித்து அதற்கு "நாகானன விகாரை என்று பெயரிட்டார்.

இந்நிலத்துத் துறவி நாகரினத்துப் பெயரை இட்டதற்குக் காரணம் நாகானனம் என்னும் ஊரில் எடுக்கப்பட்டதாகலாம். அன்றி நாகானனன் என்னும் நாகாநாட்டான் உதவியால் எடுக்கப்பெற்று அவன் பெயரிடப்பட்டிருக்கலாம். எவ்வாறாயினும் இப்பகுதி நாகானனம் என்னும் பெயரில் வழங்கியுள்ளது உண்மையாகும்.

எனவே, நாகர் தொடர்பிலேயே பூம்புகார் மக்கள் இவ்வூரை அணுகினர். உறையூர் சென்ற சோழ மன்னன் பூம்புகார் அழிவால் சோழநாட்டிற்கு அமைந்திருந்த புகழ் பெற்ற துறைமுகம் இல்லாமற் போனமையால், விரைந்து மற்றொரு தக்க துறைமுகத்தை அமைக்க முனைந்திருப்பான். ஒரளவில் துறைமுக இயற்கையும் அவ்வளவில் கலத்தின் அல்லது நாவாய்களின் போக்குவரத்தும் அமைந்திருந்த இப்பகுதி உரிய இடமாகியது. விரைந்து - இக்காலச் சொல்லில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/57&oldid=584939" இலிருந்து மீள்விக்கப்பட்டது