பக்கம்:நாகப்பட்டினம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெயர் பெற்ற நாகை 4s

நாகர் பட்டினம் - நாகபட்டினம்

- இப்பெயர் நாகர் தொடர்பால் அடித்தளம் கொண்டு சோழன் முனைப்பால் துறைமுகமான பெயர். முழுத்தமிழ்ப் பெயர். நிலைத்து விளங்கும் பெயர்.

இப்பெயராம் நாகர்பட்டினமே st്കേുഖങിജു பயணிகளால் அவரவர் மொழி ஒலிப்பில் பின்வருமாறெல்லாம் குறிக்கப்பெற்றது.

தாலமியால் - நிக்கவ்வா (Nikawa)

மார்க்கபோலோவால் - படான் (Pa- tan)

இத்சிங்கால் - நாகவதனா (Nagavadana)

இரச்.புதினால் - teslutt sår(Mali - Pa - tan)

கலியாணிப் பட்டயத்தில் - நவுட்டபட்டனா(Nawwttapattana)

போர்த்துகீசியரால் - நெகபட்டன்

ஆலந்துக்காரரால் - நேகபேட்டன் -

ஆங்கிலேயரால் - நெகபெட்டாம் (Negapetum)

புத்தநூல்கள் - நெகமா, நாகானனை, நாகநகரம் எனச் சில பெயர்கள்

சைவம் - நாகைக்காரோணம்

திருமாலியம் - திருநாகை

மேலே கண்டு காட்டிய பெயர்களுள் நீர்ப்பெயற்று' என்னும் பெயர் சங்க காலத்தோடு சரி. பதரிதிட்டா புத்தக் குறிப்புகளோடு முடிந்தது. நிகமா அகழ்வில் கிடைத்த புத்தச் சிலைகளில் பொறித்த எழுத்தோடு நின்றது. நாகானனம் அந்தக் காலத்து வழக்கோடு அழிந்தது. நாகர்பட்டினமும் நாகபட்டினம் என்று ஒரெழுத்து தொக்கு நிற்க இன்றளவும் வழக்கில் பெயர் பெற்றுள்ளது. ஆனாலும், நச்சினார்க்கினியர் ஆட்சி, இராசராச சோழனது ஆனை மங்கலம் செப்பேடு, தொடர்ந்த சில ஆவணங்கள், பெரியபுராணம், நாயக்க மன்னர் அலுவலர்கள், மராட்டிய மன்னர் காலப்பதிவுகள், உடன்படிக்கை ஆவணங்கள், இன்றைய வழக்குகள் ஆகியவற்றில் நிலவுகின்றது. ஆனால் நாகர்பட்டினத்தின் மரூஉச் சொல்லான நாகை என்னும் பெயர்தான் தமிழ் இலக்கியங்களில் பொறிக்கப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/63&oldid=584945" இலிருந்து மீள்விக்கப்பட்டது