பக்கம்:நாகப்பட்டினம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெயர் பெற்ற நாகை 55

இவ்வாறு நாகநாட்டு நாகர் இந்தியாவில் குடியேறிய வரலாற்றை இடங்காட்டிக் கொண்டே போனால் அந்த விவரப்பட்டியல் நீளும், இங்குக் காட்டப்பட்டவைகளே போதுமானவை.

உ. நாகர்க்கு நுழைவாயில் அவ்வாறானால் நாகநாட்டு நாகர் இந்தியாவில் எவ்வழியே புகுந்தனர். அவர்கள் கரையேறிப் புகுந்த நுழைவாயில் எது? அதற்கும் அறிஞர் கே. பக்ராசி, -

"நாகமக்கள் தெற்கே ஏதோ ஓரிடத்திலிருந்து இந்தியாவின் எல்லையைக் கடந்து வந்தனர் என்று கருதப்படுகிறது" (19) என்று ஒரு கருத்தைத் தந்துள்ளார்.

"தெற்கே ஏதோ ஓரிடம்" என்ற அறிய முடியாத கருத்தைத் தரும் தொடர் அவரால் விடுவிக்கப்பட்டிருக்க முடியும். முடியாமைக்குக் காரணம் அவர் தமிழ் இலக்கியங்களையும், மொழித் தமிழ் இயலையும் கற்காமையேயாகும்.

நாகர்தம் இந்தியக் கரைப்போக்குவரத்து இலங்கை வழியாகப் புத்த சமயத் தாக்கம் கொண்டு பதரி திட்டா' என்னும் நம் நாகையில் தான் தொடங்கியது.

எனவே, நாகர்தம் முதற் குடியிருப்பை இந்தியாவின் கிழக்குக் கடற்கரையாகிய சோழநாட்டுப் பழம் பேரூராம் நீர்ப்பெயற்றில் அதாவது அன்றைய பதரிதிட்டையில் ஏற்படுத்தினர் என்பதே. இஃதே உறுதிசெறிந்த உண்மை. நாகரினத்தவர் இந்திய மண்ணில் அடிவைத்த நுழைவாயில் இந்நாகையே. நாகரால் தாக்கம்

நுழைந்தவர் இந்தியாவில் ஆங்காங்கே குடியமர்ந்தனர். இவர் குடியமர்வால் இந்தியா குறிப்பாகத் தமிழ்நில மக்களிடம் நேர்ந்த தாக்கம் என்ன? அத்தாக்கம் எந்த அளவில் மாற்றத்தை ஏற்படுத்தியது அல்லது தாக்கத்தின் எதிரொலியாக என்ன மாற்றம் பெற்றது? - -

நாகர் புத்த மதத் தொடர்புடன் நுழைந்தனர். அத்தொடர்பு நழுவாமலே தாக்கம் நிகழ்ந்தது.சில பெயர்களை வைத்து இதனைக் காண முடிகின்றது. - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/73&oldid=584955" இலிருந்து மீள்விக்கப்பட்டது