பக்கம்:நாகப்பட்டினம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi

வழங்க நேர்ந்தது. நாகை நகராட்சி நூற்றாண்டு விழாமலரில் மற்றொன்று இடம் பெற்றது. தமிழ்ப் பல்கலைக் கழக வாழ்வியல் களஞ்சியத்திற்குச் சற்று ஆழமான கருத்துக்களைக் கொண்ட நாக பட்டினம் கட்டுரை எழுதி வழங்கினேன். У- ......

இருப்பினும் நாகை வரலாற்றை விரிவாக ஆராய்ந்து எழுத வேண்டும் என்னும் உள்ளுணர்வு ஒரு காதலாகவே உள்ளத்தை அவ்வப்போது தழுவியது. இன்று நாக பட்டினம் என்று வரலாற்று மணத்துடன் மலர்கிறது. -

ஒரு நகரைப் பற்றி வரலாறு என்பது அதன் சுற்றெல்லைக்குள் மட்டும் சிறையிருப்பதன்று. நாடு தழுவிய. உலகளாவிய பேரெல்லைக் குள்ளும் உலா வருவதாகும். இவ்வரலாறும் அத்தகையதே. *

ஒரு நகரைப் பற்றிய வரலாற்றை வடிப்பதற்கு வரையறுக்கப்படாது போனாலும் ஒரு வரலாற்று இலக்கணம் இருக்கலாம். ஆனால் அவ்வாறு ஒர் இலக்கணத்தை நானே வகுத்துக்கொண்டு அதன்படி இதை வரலாற்று இலக்கிய மாக்கியுள்ளேன். -

இஃதொரு வரலாற்று நூல் மட்டும் அன்று; ஒர் ஆய்வு நூல்: வரலாற்று ஆய்வு நூல். ஆழமாக ஆய்ந்து செய்யப்பட்டது. இஃது உண்மை என்பதைப் படிப்போர் உணர்வர்.

அடுத்து அறிவிக்கப் பெற்றுள்ள இந்நூல் காட்டும் ஆய்வின் உண்மைகள்' என்னும் பட்டியலே சான்றும் ஆகும்.

இந்நூல் ஒன்பது பருவங்களில் அமைந்துள்ளது. பிறப்புப் பருவமாக வரலாற்றுத் தோற்றுவாயில் தொடங்குகின்றது. உண்மை வழுவாமல் ஒரு கற்பனை மெருகுடன் பிறக்கிறது.

கால ஓட்டத்தில் நகரின் பெயர் மாற்றம் பெறுவதுண்டு. நாகையும் பெற்றது. பெயர் சொல்லாமல் விடக் கூடாது என்று பெயர் பெற்ற நாகை தொடர்கிறது.

ஆட்சியில்லாமலா நகர நடைமுறை நிகழும்? காலவாரியில் விரிவார்ந்த பாங்கில் ஆட்சி நாகை பதியப் பெற்றுள்ளது. இது மூன்றாவது பருவம். - r நகர் என்றால் அதற்கொரு அமைப்பு உண்டு. அஃது இயல்பாகவும், திட்டமிட்டதாகவும் அமையும். இரண்டையும் அடையாளம் காட்டுவது

நகரமைப்பு நாகை!" - -

மக்கள் இல்லாமல் நகர் இல்லை. 18 வகை மக்கள் இடம் பெற்றமை விளக்கப்படுகின்றது, ஐந்தாவது பருவத்தில்.

ஆறாவது பரும் சமய நாகையாக வளர்ச்சியுறுகிறது. உலகளாவிய சமயங்கள் ஐந்து, நாகையளாவிய சமயங்களாக விளங்கியவற்றின் குறிகளையும் நெறிகளையும் காணலாம். *

வணிகந்தான் உலகிற்கு நாகையை அறிமுகப்படுத்தியது. உலகத் தொடர்பையும் நாகை கொள்ள வைத்ததும் வணிகமே. வணிகத்துடன் நெருங்கிய தொழிலும் நாகையை எவ்வாறு வளர்த்தன என்பன அடுத்துக் காணப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/8&oldid=584893" இலிருந்து மீள்விக்கப்பட்டது