பக்கம்:நாகப்பட்டினம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 நாகபட்டினம்

இதுபோன்றே கி.பி. முதலிரண்டாம் நூற்றாண்டளவிலேயே அசாமில் குடியேறிய நாகரால் நாகமலையும், பின்னர் நாகாலாந்தும் பெயர் பெற்றன. -

இதுபோன்றே நாகர் குடியேற்றத்தால்- அவ்வினத்தார் பெயரால் “நாகர்பட்டினம் பெயர் பெற்றது.

ஒர் ஊரார் மற்றொரு நாட்டில் அமைந்து ஒன்று சேர்ந்து வாழும் ஊர்ப்பகுதியும் அவ்வூரார் பெயர் பெற்றிருப்பதைக் காண்கிறோம். இலங்கையில் பட்டுக்கோட்டை மக்கள் கூடி வாழ்ந்த ஊர் வட்டுக் கோட்டை எனப்படுகிறது. இதுபோன்றதே, அங்குள்ள திருநெல் வேலிப் பெயருமாகும். மலேயாவில் இராமநாதபுரம் உள்ளது. மூணாறு உள்ளது. இதற்கெல்லாம் ஆழம் தருவது போன்று நாகர் பட்டினத்து வணிகப் பெருமக்கள் யாவாவில் இடம்பெற்ற ஊர் இன்றும் நாகபட்டினம் என்ற பெயரில் உள்ளது. வெளிநாடு என்ன; ஒரு நாட்டுக்குள்ளேயே அந்நாட்டின் மற்றொரு ஊரார் அமைந்து தம் ஊர்ப்பெயரை நாட்டியுள்ளனர்.

தஞ்சாவூரில் இராமநாதபுரம் உள்ளது. அங்கங்கே பல தூத்துக்குடிகளும் புதுக்கோட்டைகளும் உள்ளன.

உள்ளூர்க்குள்ளும் ஒரு சான்று என்பது போல் நாகைப் பகுதியிலேயே செட்டிமார், வடுகர்மார் குடியேறிய சிற்றுார்கள் செட்டிச்சேரி, வடுகர்சேரி எனறுள்ளன. நாகர் பட்டினத்திற் குள்ளேயே பார்ப்பனர் அமைந்த சேரி பார்ப்பனச்சேரியாக பெயரளவில் உள்ளது.

இவை போன்றே பதரிதிட்டை பட்டினமாகி இனத்தார் பெயரால் நாகர்பட்டினம் என்னும் பெயர் பெற்றது என்பது நிலைக்கிறது. நாகர்பட்டினமிருக்கட்டும். அதன் மரூஉப் பெயராகிய நாகை என்னும் பெயரில் மன்னார்குடிக்குப் பக்கத்தில் ஒரு நாகையும், மதுரைப் பக்கத்தில் ஒரு நாகையும் மேலும் சில நாகைகளும் உள்ளன.

ஏ. நாகர்பட்டினமே நாகபட்டினம்

நாகரால் பெயர் பெற்ற பட்டினம் நாகர்பட்டினம் என்றன்றோ வழங்கப்பெற வேண்டும். இடையில் உள்ள இடை இனத்திற்குரிய 'ர். மறைந்து நாகபட்டினம் என வழங்கப்பெறுதல் ஏன் என்று ஐயுறலாம். இதுதான் அடிப்பட்ட வழக்கின் அடையாளமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/80&oldid=584962" இலிருந்து மீள்விக்கப்பட்டது