பக்கம்:நாகப்பட்டினம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெயர் பெற்ற நாகை - 63

சோழர் ஆண்ட நாடு சோழர்நாடு என்னும் வழக்கில் இல்லை. சோழநாடுதான் பெயர். இது போன்றே

பாண்டியர் நாடு - பாண்டிநாடு சேரர் நாடு - சேரநாடு தொண்டையர் நாடு - தொண்டை நாடு

மொத்தத்தில் தமிழர் நாடு. - தமிழ்நாடு நாடு மட்டுமா? பட்டினம் பெயர்களும். - சென்னப்பன் பட்டினம் - சென்னப்பட்டினம்,

சென்னபட்டினம் சிரீரங்கர் பட்டினம் - சிரீரங்க பட்டினம் மகாதேவர் பட்டினம் - மகாதேவபட்டினம் வைசாகர் பட்டினம் - வைசாக பட்டினம்,

விசாகபட்டினம்

என அமைந்துள்ளன.

எனவே நாகர்பட்டினம் என்னும் நிறை பெயரே நாகபட்டின மாகப் பெயர் பெற்றுள்ளது. ஆனால் இதனை நாகப்பட்டினம் என்று இடையில் பகர ஒற்று போட்டு எழுதப்படுகிறது. இது தவறே. பகர ஒற்று' இட்டுப் பிரித்தால் அது நாகம் + பட்டினம் என்றே பிரிபடும். பிரிபட்டு அதன் மூலப் பொருளை மாற்றிப் பாம்புப்பொருளைத் தந்து வரலாற்றை மாற்றி விடும்; மயக்கத்தையும் தரும். எனவே நஞ்சைக்கொண்ட பாம்பைக் காட்டும் பகர ஒற்றாம் நஞ்சை நீக்கியே வழங்க வேண்டும்.

இலக்கியங்களிலும், பழம் ஆவணங்களிலும் பட்டயங்களிலும் “நாகபட்டினம் என்றே ஆளப்பெற்றுள்ளது. மறைமலையடி களாரும் நாகபட்டினம் என்றே எழுதியுள்ளார்.

அவ்வாறானால் இந்நூலில் நாகர்பட்டினம் என்று எழுதப் படுவது ஏன் என்று வினவலாம். இப்பட்டினத்தின் வரலாற்றுப் பெயரைச் சுட்டிச் சுட்டிச் சொல்லி அறிமுகப்படுத்துவதற்கே நாகர் பட்டினம் என்று ஆளப்பெறுகின்றது. வரலாற்று அமைப்பான பெயரை மக்கள் நினைவிற் கொள்ள வேண்டுமென்று கருதியும் நாகர்பட்டினம் என்று கையாளப்பெறுகின்றது. இஃதொரு பதிவாகவும் அமையும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/81&oldid=584963" இலிருந்து மீள்விக்கப்பட்டது