பக்கம்:நாகப்பட்டினம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64.

நாகபட்டினம் என்பதும் நாகர்பட்டினமே இப்பகுதியில் நாகை பெற்ற பெயரின் வரலாறு விரிக்கப் பெற்றது. காலத்திற்குக் காலம் காரணங்களால் பெயர்களைப் பெற்று வந்த பெயர் வரலாற்றில் ஒவ்வொரு பெயராக மறைந்தாலும் வரலாற்று ஏட்டில் இலைமறை காய்களாக உள்ளன.

- நாகர்பட்டினம் என்னும் நாகபட்டினமே நிலைத்த பெய ராயிற்று.

இவ்வாறு பெயர் பெற்ற நாகை தன் பெயர் பொறித்ததால் புகழ் பெற்றதா? ஆம் பெற்றது.

"பொன்னி நாடெனும் கற்பகப் பூங்கொடி மலர்போல் நன்மை சான்றது நாகபட்டினத்திரு நகரம்". - என்று சேக்கிழாரால் புகழ் பாடப்பெறும் அளவில் சோழ நாட்டின் வாடாத கொடி மலராகப் புகழ் பெற்றது. உலகத்தையும் இதன் புகழ் எட்டிப்பார்த்துள்ளது. -

உலகம் தன் முகத்தைப் பார்க்க ஆவல் கொண்டதாம். தன்னைத் தனக்குக் காட்டுவது முகம் பார்க்கும் கண்ணாடியன்றோ? அவ்வாறு உலகம் பார்த்துக்கொள்ளும் கண்ணாடியாக, உலகத்துடன் உலகோர் பார்த்துக்கொள்ளும் கண்ணாடியாக,

"குவலயம் காணும் ஆடி மண்டிலம் போல்வதவ் வணிகிளர் மூதூர்" என்று புகழ்ந்தார் சேக்கிழார்.

சமயத்தால் புகழ் பெற்றது: வணிகத்தால் புகழ் பெற்றது: தமிழால் புகழ் பெற்றது: ஒரளவில் வளத்தாலும் கல்வியாலும் புகழ் பெற்றது; நகரமைப்பாலும், மக்களாலும் புகழ் பெற்றது: 'ஆட்சியால் புகழ் பெற்றதா என்றால் அடுத்துவரும் ஆட்சி நாகையைப் படிப்போர் கிடைக்கும்விடையைக் கொள்வார்களாக!

ខ្សofឃវើ கொண்டுகாட்டி கொண்டுகாட்டி நூற்குறுக்கம் 1. நாலடியார் : [5T69ા. - : 99 2. பாலை பாடிய பெருங்கடுங்கோ : &s]. - 17--21 3. நோய்பாடியார் : அகம். - 67:9

4. கபிலர் : புறம். - 202:6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/82&oldid=584964" இலிருந்து மீள்விக்கப்பட்டது