பக்கம்:நாகப்பட்டினம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. ஆட்சி நாகை

அ. நான்கு வகை ஆட்சி

நாகர்பட்டினத்தின் ஆட்சி வரலாற்றை நான்கு தொடர்களில் நிறைவேற்றிவிடலாம். ஒன்று, தமிழ் மண்ணின் மைந்தர் ஆண்ட போது அவர்தம் ஆட்சியில் இருந்தது. இரண்டு, அயல்மண் மைந்தர் ஆண்டபோது அவர்தம் ஆட்சியில் இருந்தது. மூன்று, கடல்க்டந்த வேற்று மண் மைந்தர் ஆட்சியில் இருந்தது. நான்கு, விடுதலை பெற்ற இந்தியாவின் தன்னாட்சி.

இவற்றை ஆட்சி வரலாற்றில் நான்கு அதிகாரங்களின் தலைப்புக்களாக,

அ. தமிழ் மன்னர் ஆட்சி:

ஆ. அயல்புல மன்னர் ஆட்சி;

இ. வேற்று நாட்டவர் ஆட்சி;

ஈ. விடுதலைத் தன்னாட்சி - எனச் சூட்டிக் கொள்ளலாம்.

ஆ. தலைநகர் அன்று; துறைமுகமே!

நாகர்பட்டினம் ஆளுகையின் தலைநகராக இருந்ததில்லை; துறைமுகமே! இந்நகரில் அமர்ந்து இடம் பெற்று ஆட்சிக்களமாகக் கொண்டோர் அயல் நாட்டார் இருவகையார் மட்டுமேயாவார். பிறர் எவரும் இதனைத் தலைநகராகக் கொண்டு இடம்பெற்று ஆள வில்லை. துறைமுகம் அமைந்த பட்டினமேயன்றி ஆளுகைத் தலைநகர் அன்று. இங்கு அரண்மனை இல்லை; இருந்ததாக எந்தச் சுவடும் இல்லை.

அவ்வாறானால், மேலைக்கோட்டை வாயில் வடக்குக் கோட்டை வாயில் என்றும் பெயர் வழக்குகள் இன்றும் உள்ளனவே? இவை சுவடுகள் அல்லவா என்று வினவலாம்.

ஆம், உள்ளன. ஆனால், கோட்டை வாயில்கள் இருந்திருக்க லாம்; கோட்டை இல்லை. இத்துறைமுகப் பட்டினத்தின் மேற்கு எல்லையில் புகுவாயிலாக ஒரு தோரண வாயில் இருந்திருக்கும். வடக்கு எல்லையாக ஒரு தோரண வாயில் இருந்திருக்கும். கிழக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/84&oldid=584966" இலிருந்து மீள்விக்கப்பட்டது