பக்கம்:நாகப்பட்டினம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ. தமிழ் மன்னர் ஆட்சி இங்குத் தமிழ்மண் என்றது "வட வேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம்" (3) ஆகும். சோழர், பாண்டியர், சேரர், தொண்டையர் என்னும் அரச குடியினரே தமிழ் மண்ணின் மைந்தர்.

இவருள் பெரும்பகுதியினராகச் சோழ குல மன்னர் ஆட்சியில் நாகை திகழ்ந்தது. இடை இடையே பாண்டியரும் இந்நிலப்பகுதியை ஆண்டனர். -

1. தொன்மைச் சோழர் ஆட்சி நமக்குக் கிடைத்துள்ள தொன்மைச் சோழர், "தூங்கெயில் மூன்றெறிந்த சோழன்' (தொடித்தோள் செம்பியன்) "பறவைக்காகக் குறைவில் உடம்பெறிந்த கொற்றவன்" (FLী Losঠাসা ঠো) "கறவை முறை செய்த காவலன்" (இயற்பெயர் அறிய இயலாத மனுச் சோழன்) "வடவரைமேல் வாள்வேங்கை ஏற்றின கொற்றவன்" (4) (கரிகாற் சோழன்) - - என்று சிலம்பு வரிசைப்படுத்திப் பாடும் நால்வர் அறியப்படு கின்றனர். இடையில் கரிகாலன் தந்தை அச்சந்தரும் தேர்ப்படையை உடைய "இளஞ்சேட் சென்னி" உள்ளான். தொடர்ந்து கிள்ளி வளவன், நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, போர்வைக்கோ பெருநற் கிள்ளி, நெடுமுடிக்கிள்ளி, இளந்திரையன், செங்கணான், நல்லடி முதலியோரை அறிகிறோம். - -

இன்னோர் ஆட்சியில் நாகை ஆட்பட்டு ஆளப்பட்டது. நெடுமுடிக்கிள்ளி தவிர ஏறத்தாழ அனைவருமே என்று சொல்லலாம், நீர்ப்பெயற்று, பதரிதிட்டா என்னும் பெயரில் இருந்த இந்நாகையை எட்டியும் பார்த்திரார். பரந்து பட்ட இவர்தம் ஆட்சியில் ஓர் ஊராக இஃது இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/88&oldid=584970" இலிருந்து மீள்விக்கப்பட்டது