பக்கம்:நாகப்பட்டினம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்சி நாகை 7 i.

கோச்செங்கட் சோழன்

செங்கணான் என்பான் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை ஆண்டவன். முற்காலச் சோழன் எனப்படுவான். மூன்றாம் நூற்றாண்டில் இப்பெயர்கொண்ட கோச்செங்கணான் ஆட்சி பெற்றான். முன்னே கண்ட செங்கணான், சேரமான் கனைக்கால் இரும்பொறையுடன் போரிட்டு வென்றவன். சேரமானைக் குடவாயிற் கோட்டச் சிறையில் வைத்தவன். அவ்விடம் இன்றும் அக்குறிப்புடன் உள்ளது. பின்னே வந்த கோச்செங்கணான் தமிழகமெங்கும் சிவபெருமானுக்குப் பெருங்கோயில் எடுத்தவன். திருநாவுக்கரசராலும், திருமங்கையாழ்வாராலும் பாடப்பெற்றவன். முன்னவனில் இவனை வேறுபடுத்திக் காட்டவே 'கோ' என்னும் அடைமொழி சேர்த்துக் கோச்செங்கணான் எனப் பெற்றான்.

இவன் ஆட்சிக் காலத்தில் நாகை பட்டினமாக உருவாகிவிட்டது. இவன் இங்கு வந்திருக்கக் கூடும். கூடும் என்று ஐயத்தோடு எழுதுவதற்குக் காரணம் நாகையில் இவன் எடுத்த பெருங்கோயில் அமையாமையேயாகும்.

இடையில் இந்நாகைக்குரிய மன்னன் ஒருவன் இம்மண்ணில் அரசனாக வராமை ஒரு குறையே. அவன் இளந்திரையன். கடல் அலைகள் தர நாகைக் கரையில் உயிருடன் வந்த திரைதர வந்த தால் இளந்திரையனானவன். காஞ்சியில் இருந்தே ஆண்டான். அப்போதும் நாகை பட்டினமாக முழு உருப்பெறவில்லை.

செங்கணானுக்குப் பின்னர் சில சோழமன்னர் ஆண்டனர். ஆனாலும் அயல் மண் மைந்தராகிய களப்பிரர் புகுந்து கைப்பற்றிய தால் முற்காலச் சோழர் என்று பெயர் பெறும் அளவில் சோழர் ஆட்சி முடிவடைந்தது.

கி.பி. 400 முதல் ஏறத்தாழ 590 வரை களப்பிரர் என்பார் தமிழ்நாட்டாட்சியைக் கைப்பற்றி ஆண்டனர். இன்னோர் தமிழ் மண்ணின் மைந்தர் அல்லர். எனவே, இவ்விடைக்காலம் அயல்புல மன்னர் ஆட்சிக்காலமாகிறது. இஃது இத்தலைப்பில் பின்னர் காணப்படும். - 2. இடைக்காலப் பாண்டியர் ஆட்சி (590-862)

கி.பி.590-இல் பாண்டியன் கடுங்கோன் என்பான் களப்பிரரை வென்றான். இதனை வேள்விக்குடிச் செப்பேடு கூறுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/89&oldid=584971" இலிருந்து மீள்விக்கப்பட்டது