பக்கம்:நாகப்பட்டினம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 நாகபட்டினம்

கடுங்கோன் சங்க காலத்திற்குப் பின்னர் ஏறத்தாழ மூன்று நூற்றாண்டிற்குப் பின்னர் தோன்றிய பாண்டியன். ஆதலால் இவனையும் இவனைத் தொடர்ந்தோரையும் இடைக்காலப் பாண்டியர் எனலாம்.

பாண்டி நாட்டில் காலூன்றிய கடுங்கோன் களப்பிரர் ஆட்சியில் இருந்த சோழநாட்டுப் பகுதியையும் தன் ஆளுகையில் கொண்டான். பாண்டியர் தமிழ் மண்ணின் மைந்தர். எனவே, இவனை முதலாகக் கொண்டு தொடர்ந்த ஆட்சி தமிழ் மண் மைந்தர் ஆட்சியாகும்.

இவனுக்குப் பின் வந்த மாறவர்மன் அவனிசூளாமணி (620-645), செழியன் சேந்தன் இருவரும் சோழரை வென்றனர் என்று காண்பதால் களப்பிரருக்குப் பின் சோழமன்னர் சோழ நாட்டைச் சிதறலாக அவ்வப்போது ஆட்சி கொண்டனர் என்று கொள்ள வேண்டியுள்ளது. இன்னோரை இடைக்காலச் சோழர் என்று குறிக்கலாம். -

பின்னர் தொடர்ந்து பாண்டியன் அரிகேசரி என்னும் நின்றசீர் நெடுமாறன் முதல் இரண்டாம்வரகுணவர்மன் வரை கி.பி. 862 வரை சோழநாட்டுப் பெரும்பகுதியை ஆண்டனர். 3. இடையிடையே பல்லவர் கையிலும் சோழநாடு இருந்தது. மேலே கண்ட பாண்டியருள் கூன்.பாண்டியன் என்பான் "ஒரு பகல் போதில் சோழரை வென்றான்" என்றும், சிறிமாற சிறீ வல்லவன் பல்லவ மன்னரை சோழநாட்டுக் குடமூக்கு என்னும் கும்பகோணத்தில் தோற்கடித்தான் என்றும் வேள்விக்குடிச் செப் பேட்டில் காணப்படுகின்றது. நின்றசீர் நெடுமாறன் என்பான் கூன னாக இருந்து சைவத்தால் நிமிர்ந்து நின்றசீர் நெடுமாறன் ஆன வன். இவன் சைவப் பெருமகள்ாகிய மங்கையர்க்கரசியாரை மணந் தவன். மங்கையர்க்கரசியார் சோழ நாட்டு இளவரசி யாதலாலும் இடையிடையே சோழர் சிற்றரசர்களாய் அவ்வப்போது மற்றவர் துணையுடன் சோழ நாட்டை ஆண்டுள்ளமை புலனாகின்றது.

எனவே, ஏறத்தாழ 500 ஆண்டுகள் சோழ நாட்டைச் சோழர் பெருமன்னராய் ஆளுாது மற்றவர் ஆள நேர்ந்தது. இக்காலத்தில் தமிழகத்திற்கு வந்த அதாவது கி.பி. 640 அளவில் வந்த சீனப் பயணியின் குறிப்பொன்று ஒரு குறிப்பு தருகின்றது. அவன் கீழைக் கடற்கரைத் துறைமுகமாக நாகர்பட்டினத்தைக் குறித்துள்ளான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/90&oldid=584972" இலிருந்து மீள்விக்கப்பட்டது