பக்கம்:நாகப்பட்டினம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

亨连 நாகபட்டினம்

வாழ்வுடன் எளியவரைப் போற்றும் மனப்பாங்குடையவர். நாலடியார், -

"பெருமுத் தரையர் பெரிதுவந் தீயும் கருணைச் சோறார்வர்" (5) என்று ஒரு பெருமுத்தரையரைப் பாராட்டியுள்ளது. பிற்காலத்தும் சோழநாட்டில் இந்த அரையர் பட்டம் பெற்றோர் பலர் பலதுறைக்கு இருந்தனர். அரையர் என்னும் சொல்லே மருலிக் குறைந்து 'ராயல் ஆயிற்று.

தஞ்சை + அரையர் - தஞ்சையரையர் - தஞ்சைராயர். மழவர் அரையர் - மழவரையர் - மழவராயர் முனையது அரையர் - முனையதரையர் சேனை + அரையர் - சேனாவரையர் பல்லவ + அரையர் - பல்லவரையர் - பல்லவராயர் சேதி + அரையர் - சேதியரையர் - சேதிராயர் - எனப் பல இனப்பெயர்கள் இக்காலத்தும் உள்ளன.

அரபிக்கடல் வழி வந்திறங்கிய அரபியர் கலஞ்செலுத்தும் வல்லமை பெற்றிருந்தனர். இங்கமைந்த போது தமிழ்மண் அரசர் அவரை மரக்கல அலுவல் அதிகாரியாக, அஃதாவது அரையர்களாக அமர்த்தினர். அன்னார் மரக்கலவரையர் எனப்பெற்றனர். அச் சொல் இக்காலத்தும் மரக்கலவரையர் - மரைக்காயர் - மரைக்கார் -மரைக்கான் என்று திரிந்து வழங்கப்பட்டுள்ளதை அறியலாம்.

இவ்வகையில் பழங்காலப் பெருமுத்தரையர் வழியில் வந்த பெரும்பிடுகு முத்தரையர் என்பார் அப்போது சோழநாட்டில் ஆளுமை பெற்றிருந்த பல்லவரால் தஞ்சை ஆட்சியைப் பெற்றார். வல்லத்தில் இருந்து ஆண்டார். இவர் ஆட்சிக் காலத்தில் நாகையும் இவருக்கு உட்பட்டிருக்கலாம். முத்தரையர் ஆட்சி மிகக் குறுகிய கால அளவினதே.

4. பிற்காலச் சோழர் ஆட்சி (கி.பி. 870- 1279)

கி.பி. 870-இல் தலையெடுத்த விசயாலயன் என்னும் சோழமன்னன் தஞ்சை ஆட்சியைப் பெரும்பிடுகு முத்தரையரிட மிருந்து கைப்பற்றினான். இதனைத் திருவாலங்காட்டுச் செப்பேடு (6) அறிவிக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/92&oldid=951287" இலிருந்து மீள்விக்கப்பட்டது