பக்கம்:நாகப்பட்டினம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்சி நாகை 77

இப்பிரிவில் நாகர்பட்டினம் பட்டினக் கூற்றம் என்று கூற்றமாக அதாவது இக்கால வட்டமாக (Taluk) அமைந்தது. -

ஆட்சி உரிமை சோழமன்னனுடையதே, அவனே முழு ஆட்சிப் பொறுப்பும், ஆளுமையும் கொண்டவன். ஆயினும் பகுக்கப்பட்ட இறுதிச் சிறுபிரிவாகிய ஊர்களின் ஆளுகைத் திட்டம் அவ்வவ்வூர் மக்களால் - மக்களால் தேர்ந்தெடுக்கப் படுவோரால் கவனிக்கப் பட்டது. நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆட்சி நடப்பால் பல்வகைத் துறைகள் உண்டாயின. ஒவ்வொன்றும் வாரியம் என்று பெயர் பெற்றது. பொன்வாரியம், ஏரிவாரியம், சம்வத்சர வாரியம் முதலிய வாரியங்கள் அமைந்தன. அவற்றின் நடப்பிற்குக் குடவோலை முறையில் ஊர் வாரியத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஊருக்குள் மக்கள் குடும்பம் குடும்பமாகக் கணக்கிடப்பட்டனர். அது குடும்பு எனப்பட்டது. இது இக்கால வார்டு (Ward) என்று குறிக்கப்படுகிறது. ஒவ்வொரு குடும்புக்கும் ஒவ்வொரு வாக்குரிமை உண்டு. இவ்வாக்குரிமை பனை ஒலையில் பெயர் பொறிக்கப்பட்டு குடும்புக் கட்டாகி ஒரு குடத்திற்குள் போடப்பட்டுச் சிறு குழந்தையால் ஒரு கட்டு எடுக்கப்பட்டுப் பின்னர் கட்டைப் பிரித்து ஒரு ஒலையும் எடுக்கப்பட்டு மக்கள் தேர்தல் அறிமுகமாகி நடைமுறையாயிற்று. இவ்வாட்சி முறை பின்னர் ஊராட்சி முறையாயிற்று.

இஃது, உண்மையாகவே உலகத்திற்கு வாக்குரிமைத் தேர்தலை முதலில் அறிமுகப்படுத்தியதாகும்; தமிழர் கண்டுபிடித்ததும், கடைப்பிடித்ததுமாகும்.

இவ்வகையில் நாகைக்குக் குடவோலைத் தேர்வு நடந்து சிற்றுார்களில் ஆளுகை நடவடிக்கைகள் செயற்பட்டன. நாகை ஊராட்சி முறை கொண்டது. துறைமுகப் பெருமை

நாகர்பட்டினம் தொன்மைக் காலம் முதல் வளரத்தொடங்கி, துறைமுகமாகி ஒர் அமைப்பான பட்டினமாக விளங்கியுள்ளது.

நாகை கடற்படையால் விளக்கமுற்றது. முன்னர் சிறிய அளவில் கடற்படை இலங்கியது. முதல் இராசராசன். இத்துறைமுக வழி கடற்படை கொண்டு இலங்கையில் வடபகுதியை வென்று பொலநறுவையைத் தலைநகராக்கினான். தொடர்ந்து இங்கிருந்து கடற்படையைச் செலுத்தி முழு இலங்கையையும் கைக்கொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/95&oldid=584977" இலிருந்து மீள்விக்கப்பட்டது