பக்கம்:நாகப்பட்டினம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 நாகபட்டினம்

மேலும் முதல் இராசேந்திரன் சிறப்பாகக் கடாரத்தின் மேல் படையெடுத்து வென்று அவ்வெற்றியின் நினைவாகக் கடாரங் கொண்டான் என்னும் ஊரைத் தமிழகத்தில் கண்டான். இன்றும் "கடாரங்கொண்டான் என்னும் ஊரை நாகை திருவாரூர்ச் சாலையில் காண்கின்றோம். தொடர்ந்து குலோத்துங்கனும் கடற்படையைக் கொண்டிருந்தான்.

இவர்கள் காலத்தில் நாகை கீழைக் கடற்கரையில் குறிப்பிடத்தக்க துறைமுகமாகத் திகழ்ந்தது. -

பிற்காலச் சோழர் ஆட்சியில் சோழநாட்டு நிலம் அளந்து நிலஅளவை செய்யப்பெற்றதை அறிந்தோம். இதனால் நாகையும் அளவிடப்பட்டதை அறியலாம். .

குலோத்துங்கன் சுங்கந் தவிர்த்தோன் என்று சிறப்பிக்கப் பெற்றவன். சுங்கம் இறக்குமதி ஏற்றுமதி வரி. இது தமிழில் உல்கு எனப்பெறும். இவ்வணிகம் நாகைத் துறைமுக வழியே நிகழ்ந்தது. இதனால் சோழரது நேரடி ஆட்சிக் கவனத்தில் நாகை விளங்கியதை உணரலாம். -

இச்சிறப்புகளைக் காட்டவே பிற்காலச் சோழர் ஆட்சியின் நெடும்பட்டியல் விரிவாகக் காட்டப்பெற்றது.

மூன்றாம் இராசேந்திரன் சோழ நாட்டில் ஆட்சியை முடித்து வைத்தவன். - 5. மீண்டும் பாண்டியர் இடையீடு

இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் என்பான் 1216 முதல் 1238 வரை ஆட்சியிலிருந்தான். இவன் முதற் குலோத் துங்கனுடன் போரிட்டு வென்றான். ஆயினும் சோழ நாட்டைத் தன் ஆளுகைக்குள் வைக்கவில்லை. வென்ற நாட்டைக் குலோத்துங்கனுக்கே திரும்ப வழங்கினான். இதனால் இவனுக்குச் சோழநாடு வழங்கியருளியோன் என்னும் புகழ்ப் பெயர் ஏற்பட்டது. 1257 இல் முதலாம் சடாவர்மன் என்னும் பாண்டியன் மூன்றாம் இராசேந்திரனை வென்று அடக்கித் திறை செலுத்த வைத்ததை அறிந்தோம். இவன் பிற்காலச் சோழப் பேரரசை முடித்து வைத்தவன். மூன்றாம் இராசேந்திரனுக்குப் பின்னர் இப் பாண்டியனே சோழ நாட்டு ஆட்சியைக் கொண்டான். இவன்

ட்சியில் தமிழ்நாடு முழுமையும் இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/96&oldid=584978" இலிருந்து மீள்விக்கப்பட்டது