பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனிய ஓவியங்கள் டாக்டர் ச. வே. சுப்பிரமணியன் இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், அடையாறு, சென்னை-6000 020. தமிழ் நாட்டில் பாரதிதாசன் பரம்பரையில் தோன்றிய கவிஞருள் நாச்சியப்பன் அவர்களும் ஒருவர். சமுதாயச் சீர் திருத்தம் என்ற அமைப்பில் பல கவிதைகளை அவர் பாடி யுள்ளார். எண்ணச் சிதறல்களின் இனிய ஓவியங்களாக அவை அமைந்துள்ளன. 20-ஆம் நூற்றாண்டில் கூட சாதி மத பேதங்கள் விலகி அன்பு இதயங்கள் இணைவது இயலாததாக காவலர் இல்லத்தில்’ என்ற கவிதை காட்டுகின்றது. ‘வாழவைத்தான்’ என்ற கவிதையில் தனக்குக் கிடைக் காத பொருளைப் பெறுவதற்காகச் செய்யும் அநியாயத்தை எடுத்துப் பேசுகின்றார். இனிய பாதி' என்ற கவிதை திருமணம் ஆன பின்னரும் பிற மகளிரை விரும்பும் மனிதர் இருக்கின்ற நிலையைத் தெரிவிக்கின்றது. தீண்டாமை என்பது தேவையற்ற கொள்கை எனப் "பண்பின் பரிசு என்ற கவிதை பறை சாற்றுகின்றது நால்வருண பேதமெனும் நாசமுறு குட்டையிலே காலுந் தலைமுடியும் கட்டோடே ஊறியதால் சாத்திரமே பார்க்கும் சழக்கர்கள்; பீடற்ற ஆத்திரமே கொண்ட அறிவற்ற மூர்க்கர்கள் ஆர்ப்பரித்தார்; (பக். 45)