பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 நாச்சியப்பன் மூடப்பழக்கத்தை முட்டித் தள்ளுகின்றது. பம்பாய்ப் பஞ்சாங்கம்' என்ற கவிதை. வங்கங் கடந்த மங்கை' என்ற கவிதை பெரும்பான்மை யான செட்டி நாட்டார் வேறுநாடு சென்று வாழ்கின்ற, பொது வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் கவிதை யாக அமைந்துள்ளது. இவ்வாறு எல்லாக் கவிதைகளும் சமுதாயப் புரட்சியை நோக்கமாகக் கொண்டு அமைந் துள்ளன. "இளவரசி முல்லை’ என்ற கவிதை உயர்ந்த கற்பனை வளங்கொண்டு இன்பம் பயக்கிறது. அதுவும் சமுதாயப் புரட்சியாகவே அமைந்துள்ளது. பொதுவாகக் கவிதைக்குரிய எளிமை இனிமை ஆழம் உடைமை ஆகியவை நாச்சியப்பன் கவிதைகளில் காணப்படு கின்றன. - பல புதிய உவமைகளும் சிறந்த ஒசைச்சுவையும் கவிதையில் நிரம்பி வழிகின்றன. சென்றால் உயிர்க்கச்சம் செல்லா விடில்தலைவர் கொன்றாலும் அச்சமெனக் கோழை நடுங்குதல்போல் வந்த புலிக்கஞ்சி ஒடும் வழிப்போக்கன் சிந்தை கலங்கமலைப் பாம்பெதிரே சேருதல்போல் (பக். 42) பூத்தமலர் பேய்க்காற்றில் பொன்னிதழைப் போக்கடித்து மீத்துநிற்கும் காம்பேபோல் மெய்குலைந்த தோற்றமுடன் (பக். 78) பட்டுப் படபடெனப் பட்டாசு விட்டதுபோல் கொட்டி யளந்தாளக் கோதைக்கு மாற்றுரைக்க