பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 13 தாய்க்குத் தெரியாமல் தானாய் அடுக்களையில் போய்க்கையைச் சுட்டுப் பொசுக்கிக் கொண் டான்போல (பக். 86) உண்ணவரும் பேரலைகள் கண்டும் அங்கே உறுதியுடன் உயர்ந்திருக்கும் கரையைப் போலே மண்ணுலகில் நிலைத்திருக்கும் புகழைக் காண மனங்கொண்டேன் உதவிடுவாய் கவிதை மன்னா! (பக். 98) பண்ணோடும் சொற்களிலே உயிரைத் தேக்கி நிகரற்ற கவியாக்கி இனிமை சேர்த்து (பக். 190) வீடோமுட் காடாகி நெஞ்சைக் குத்தும் (பக். 140) நினைத்ததொரு செயல்நடக்க வேண்டுமென்று நெஞ்சாரப் பொய்சொல்லும் மனித ரெல்லாம் தினைத்துணையும் பயன் நல்காப் பொய்யை நாளும் திறமாகப் பயின்றுவரல் காணும் போதில் பனைக்கழுத்தில் ஊறிவரும் சாற்றுக் கள்ளைப் பாலென்று குடிப்பதனை ஒக்கு மென்றே அனைத்துமொழி நல்லோர்கள் கூறி யுள்ள அமுதமொழி மறந்தவனும் அல்ல லுற்றான்! (பக். 142) நடக்கின்ற போதெல்லாம் கால் வலிக்கும் நடவாமல் இருக்குங்கால் மனந் துடிக்கும் கிடக்கின்ற இடைவெளியைக் குறைத்து நெஞ்சைக் கிள்ளிவரும் துயரத்தை யொழிப்ப தற்கு நடக்கின்ற செயலன்றி மருந்து வேறு நானிலத்தில் இல்லையென எண்ணிக் கொண்டு கடக்கின்றாள் பெருங்காட்டைக் காதல் கொண்டிஈர் கடக்கரிய துன்பெல்லாங் கடப்பா ரன்றோ ! (பக்.137) எனப் புல சான்றுகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.