பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாடல்கள் 15 பேரழகைப் பெற்றிருந்தாள் பெண்ணழகின் - தத்துவங்கள் சேர உருவான செய்ய திருவனையாள்! (பக் 27) என்று வருணிக்கும் பொழுது ஆசிரியரின் கவித்திறம் மிளிரு கின்றது. சமுதாயம் எவ்வாறு திருந்தும் அதற்கு அடிப்படை யாகச் செய்யவேண்டியவை எவை என்பதைப் பற்றியும் மிகத் தெளிவாகப் பேசுகின்றார். அதற்குச் சான்றாக 參夢 象 @ @ 海 முதலில் திருந்துவது தன்கடமை என்று தனிமனிதன் எண்ணமிட்டால் - இந்தச் சமுதாயம் எப்போதோ முன்னேற்றச் சிந்து படித்திருக்கும், சிந்தை தெளிவின்றி மாற்றார்மேற் குற்றஞ் சுமத்தும் வழக்கத்தைப் போற்றா திருந்தால் புவியே திருந்திவிடும் (பக்36, 37) வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய பல செய்தி களை நாச்சியப்பன் அவர்கள் கவிதையாகத் தருகின்றார். 剑 é沙够爱叠 இளம்வயதில் ஒடிப் பொருள்சேர்த்தால் ஓய்ந்துவரும் காலத்தே வாடிக் கிடக்காமல் வாழ்வு சிறப்பாகும் (பக். 73) வாழ்க்கையில் சோம்பலை நீக்கிச் சுறுசுறுப்பையும், உழைப்பையும் உருவாக்க உதவும் கவிதை ஒளி மின்னல்’ என்ற கவிதை. 20-ம் நூற்றாண்டில் சமுதாயப் புரட்சியைத் தோற்று வித்து, மூட நம்பிக்கையை அகற்றிய பெரியாரின் வாழ்க்கை பற்றிய கவிதை பாராட்டத் தக்க நிலையில் அமைந்துள்ளது. அவ்வை வழியிலே நின்று ஆத்திசூடியை நெறி சூடி ஆக்கி 103 நெறிசூடிகளையும் தந்துள்ளார் ஆசிரியர். தமிழ் இலக்கிய வாழ்வில் அறக் கருத்துகளை உடைய நூல்கள் பல, குறள் காலம் தொடங்கி இன்றுவரை