பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பிக்கை ஒளி! சிலம்பொலி சு. செல்லப்பன் உதவி இயக்குநர் தமிழ் வளர்ச்சி இயக்ககம், குறளகம், சென்னை-600 001. சொல் வளமும், பொருள் வளமும், சுடர்மிக்க கற்ப னையும் கலந்து வெல்லக் கவியெழுதி விந்தைச் சுவை படைக்கின்ற இந்த வீரக் கவிஞர் யார்? இவருடைய எழுது கோவில் எத்தனை வகை வண்ண ஒவியங்கள் மின்னிப் பளபளக்கின்றன! பாரதியும், பாவேந்தரும் இவர் வடிவில் ஒன்றாகி வந்து தம் புதுமைத் தமிழை மீண்டும் பொழி கின்றார்களோ! ஆம், கவிஞர் நாச்சியப்பன் புரட்சிக் கவிஞரின் அடிச்சுவட்டில் புதுமைக் கவிஞராய் நடைபோட் டுப் புகழ் என்னும் உச்சி நோக்கிச் செல்லும் ஒரு பூந்தமிழ்க் கவிஞர். இவருடைய பாடல் தொகுப்பு ஒரு பைந்தமிழ்ப் படையல் ஆகும். இயற்கை அழகும், உவமை நயங்களும், இன்பத்துப் பாலின் இனிய கவர்ச்சியும், உலகியல் நடை முறைகளும் இப்படைப்பில் பின்னிப் பிணைந்துள்ளன. இவர்தம் பாவியல் வண்ணங்களில் ஈடுபடும் கற்றுணர்ந் தோர் நெஞ்சம் களிப்பால் துள்ளும், கல்லாரும், இவர் கவி யின் சொல்லாற்றல் கேட்டுச் சொக்கி விடுவர் எனில் வேறென்ன விளம்ப வேண்டும்? இத் தொகுப்பில் உள்ள ஒவ்வொன்றும் தனித் தனிக் காவியமாய்க் கருதத் தக்க சிறப்புடையன. கதை நிகழ்ச் சிகள்-சிறு கதையும் காவியமும் கலந்தவையாக இடம் பெற்றுள்ளன. பொதுவாக அனைத்துப் பாடல்களிலும் பெண்ணின் பெருமை, பெண்ணைத் தாழ்வு செய்யும்