பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 நாச்சியப்பன் ஆற்றில் விழப் போனவளை மீண்டும் தடுக்கின்றான் புலையன். ஊராருக்கு அஞ்சி உயிர்விட்டுச் சாவதினும் சேரிக்கு வாநீ சிறப்பாக வாழ்ந்திடலாம்" (பக் 43) என்று கனிவாக அழைக்கிறான். பூசுரர் கூட்டம் புலையனுக்கு ஒரு நீதியும், உயர் சாதிப் பெண்ணுக்கு ஒரு நீதியும் வழங்குகிறது. அவனது கைகள் வெட்டப்பட வேண்டும் என்றும், அவளையோ வெயில் நேரத்தில் நெய்பூசிக் குளிப்பாட்டினால் தோஷம் நீங்கி விடுமென்றும் சாதிக்கொரு நீதி வழங்குகின்றார் சேஷகிரி சாத்திரியார். புலையனோ துணிந்து நீரிலிருந்து காப்பாற் றிய பெண்ணைக் கைப்பிடித்து வாழ்விலும் காப்பாற்ற முனைகிறான். பம்பாய்ப் பஞ்சாங்கம் என்னும் பாடலில் பஞ்சாங்கம் ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் பாழாக்க முயல்வதையும், மாமியின் கொடுமையையும் அதை எதிர்த்துப் போராடிப் புது வாழ்வு பெறும் பெண்ணின் உறுதியையும், தெள்ளத் தெளிவாகக் கவிஞர் காட்டியிருக்கின்றார். இப்பாடலில், கொண்டுவிற்றே ஆதாயம் கூட்டும் தொழிலில்லை கண்டுமுதல் கொடுத்து வட்டி கணக்கிட்டே உள்ள பொருள்வளர்க்கும் ஓங்கு தொழிலில்லை கள்ள வணிகத்தால் கைக்கூலித் தீவழியால் சேர்த்த பொருளில்லை; செம்மை நலங்காத்து கூர்த்த மதியாலும் கோடாத நெஞ்சாலும் நாடி வருவார்க்கு நல்லறிவுப் பேரொளியைப் பாடிப் பெருக்குகின்ற பைந்தமிழின் ஆசிரியர் (பக். 32) கன ஆசிரியத் தொழிலின் பெருமை அருமையுறப் பேசப் படுகிறது. ஆசிரியரின் மகள் வீதியில் விளையாடும்போது