பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 21 பட்ட சிறுதுயரத்தையன்றிப் பெருந்துயரம் அறியாப் பேதை. அவளோ, இப்பொழுது, பத்துநா ளாகப் படுந்துயரம் மோர்கடையும் மத்தும்அறி யாதுசெக்கு மாடும் அறியாதே! (பக். 32) இந்த அடிகள் பாரதியின், தாளம் படுமோ தறிபடுமோ யார் படுவார்' என்ற அடிகளை நினைவுக்குக் கொண்டு வருகின்றன. போர்க்களத்தில், சென்றால் உயிர்க்கச்சம் செல்லா விடில்தலைவர் கொன்றாலும் அச்சமெனக் கோழை நடுங்குதல்போல் வந்த புலிக்கஞ்சி ஒடும் வழிப்போக்கன் சிந்தை கலங்கமலைப் பாம்பெதிரே சேருதல்போல் ஆற்றுக்குத் தப்பிப் பிழைத்தெழுந்தாள் சாதியெனும் மாற்றானுக் கஞ்சி மனங்கலங்கித் தத்தளித்தாள். (பக். 42, 43) எனத் தவிப்பின் துடிப்பு பேசப்படுகிறது. திடீரென ஏற்பட்ட ஒரு நிகழ்ச்சியால் தீயன் ஒருவன் நல்லவனாய் மாறிவிடுவதைக் காட்டுவதே ஒளிமின்னல்’ என்னும் பகுதி. வள்ளியின் கணவன் ஒரு குடியன்-ஊதாரி. கொள்ளைக்காரனாகவும் மாறிவிடுகிறான். வள்ளி தன் தோழியிடம் சொல்லிப் புலம்புவதுபோல் ஆசிரியர் அமைத் திருக்கும் பகுதி அவன் பண்புநலத்தைப் படம்பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. பார்த்திபனைப் போல் இவரும் பாராளா விட்டாலும் நேர்த்தியற்ற பெண்தொடர்பில் நிச்சயமாய் அர்ச்சுனர்தான்; நீதித் தருமனுக்கு நேரில்லை என்றாலும் சூதில் அவனேதான், தோற்பதிலும் அப்படியே! . - (பக். 62)