பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 நாச்சியப்பன் இக்கொடியவன். சேர்ந்துள்ள கொள்ளைக் கூட்டத்தாருள் ஒருவன் வள்ளியைத் தூக்கிவந்து விடுகிறான். 'எதைக் கொள்ளையடித்தாலும் ஏழு பேரும் சரியாகப் பகிர்ந்து கொள்ளும் நம் வழக்கத்திற்கு ஏற்பவே இப்பெண்ணையும் நாம் பகிர்ந்து கொள்ளவேண்டும்' என்கிறான். முகத் திரையை நீக்கியதும் தன் மனைவி என்பதை அறிந்த வள்ளி யின் கணவன் சீறுகிறான். அவள் அத்தான்’ என்று புலம்பி அவன் மார்பில் சாய்கிறாள். அவன் மனம் திருந்திப் புது வாழ்வு தொடங்குகிறான். இதிகாசத் தலைவர்களாய் இருந்தாலும் அவர்களிடம் உள்ள இழிந்த குணங்களை நகைச்சுவையோடு சுட்டிக்காட்டி அவைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறுவது ஆசிரியரின் அறிவு நுட்பத்திற்குச் சான்றாய் நிற்கிறது. வங்கங் கடந்த மங்கை என்னும் பாடலில் ஒரு தலைவன் கட்டிய மனைவியைத் துறந்து கடல்தாண்டிச் சென்று அங்கு வேறு ஒரு பெண்ணை மணந்து வாழ்வதும், மனைவி சுப்பலேறிச் சென்று அவனைக் கண்டு, புதிய வளுடன் உறவு பாராட்டி அவள் மனத்தை மாற்றித் தன் கணவனை வென்றெடுக்கும் திறமும் பேசப்படுகின்றது. சிலப்பதிகாரக் கண்ணகி செய்யத் தவறியதை இக்காலப் புதுமைப் பெண், சாதித்து காட்டுகின்ற பாங்கு பாராட்டத் தக்கது. இருள் அகன்றிட ஒளி பெருகிட எனும் பாடல், தொழிற்சங்கத் தலைவன், முதலாளியுடன் சேர்ந்து தன் இனத்தவர்களுக்குத் தீங்கு செ ய் வ ைத யு ம், பின் தொழிலாளர் புதுத் தலைமை கண்டு போராடி வெல்வதை யும், உழைக்கும் குடும்பத்தினர் உவகை அடைவதையும் காட்டுகின்றது.