பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாடல்கள் .23 கோரிக்கை தன்னைக் குறையாமல் ஏற்குமட்டும் போருக்கு நிற்போம் (பக். 90) என்னும் புரட்சிப் போக்கு நன்கு காட்டப்படுகிறது. பொன் னும் வெள்ளியும் என்னும் பாடல் ஒரு புதுமை யான கோணத்தில் அமைந்துள்ளது. சிலை வணக்கம் செய் வாரின் தலையறுத்த கஜினியையும், அண்ணன் தம்பிக்குள் ளேயே போரிட்டும் காட்டிக் கொடுத்தும் கட்டோடு அழிந்துபோகும் இந்திய மன்னர்களின்-இந்திய மக்களின் பேதமையையும், புலவர் பாடும் புகழுக்கு ஏங்கிய கஜினி பர்தோசி என்னும் கவிஞனைப் பாடல் இயற்றச் சொல்லிப் பாராட்டி மகிழ்ந்ததையும் மிகவும் உருக்கமாக ஆசிரியர் இப்பகுதியில் வடித்துக் காட்டியுள்ளார். கல்லடுக்கிக் கட்டிவைத்த கோயி லுள்ள கடவுளையும் விடவில்லை கஜினி மன்னன் (பக்.96) என்ற அடிகள் கஜினியின் பிடிவாதத்தை நன்கு வெளிப் படுத்துகின்றன. கோயில் கொள்ளையடிக்கப்படுவதைக் கண்டபோதும் மார்க்கண்டேயனைக் காப்பதற்காக எமதர்மனையே. உதைத்துத் தோன்றிய சிவபெருமானின் கையாலாகா தனத்தை, வாட்டமுற்ற பக்தர்எல்லாம் அழுதிருந்தும் வரவில்லை சிவபெருமான் (பக்.96) என்ற அடிகள் வாயிலாக ஆசிரியர் விளக்கிக் காட்டும் பகுதி சிந்தனையைத் துண்டி நிற்கிறது. இறுதியில் இரண்டு குறுங்காவியங்கள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. கொய்யாக் காதல் என்னும் காவியத் தில் கதைச் செறிவு இல்லையெனினும் ஆங்காங்கே பளிச் சிடும், கவிதை மின்னலால் ஒளிபெறுகிறது. -