பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 25 என்னும் வரிகள் இயற்கை வருணனையில் கவிஞர் எவ்வளவு தூரம் கைதேர்ந்தவர் என்பதைக் காட்டி நிற்கின்றன. நாளைக்கு வருவேன்நான் என்று சொல்லி ஞாயிறுபோய் மலைப்பின்னே ஒளிந்து கொண்டான் (பக். 184) என்றும், மாக்கோல மிடுகின்ற மங்கை யல்லள் மணக்கோலந் தரவந்த காத லன்பன் நோக்காலே கலந்துயிரில் பின்னி விட்ட நூன்முடிச்சு; பிரிக்கொண்ணா அன்புச் சிக்கல்! (பக். 183) என்றும் உள்ள அடிகள் எண்ணி எண்ணி இன்புறற்குரியன. இக்கவிதைத் தொகுப்பில், காதல் உளத்துக் கணவனைத்தாம் கைப்பிடித்த மாதர்க்குக் கற்பே மதிப்புடைய சொத்தாகும் (பக். 12) இருதோளும் நல்லறிவும் அன்பு நெஞ்சும் இருக்குமட்டும் வாழ்வுக்குப் பயமே இல்லை (பக். 148) என்பன போன்ற செறிவுரைகள் பல மிளிர்கின்றன. கவிதை நயம் வாய்ந்த இடங்கள் தொட்ட இடமெல்லாம் கண்ணில் தட்டுப்படுகின்றன. காதலன் காதலியை, கண்ணில் பதிந்தாள் கருத்தில் பதிந்துவிட்டாள் எண்ணக் கருவறையில் எங்கும் நிறைந்துவிட்டாள் (பக். 14) என்று நினைவு கொள்வதும், அலைகள் ஒன்றன்மேலொன் றாக எழுந்து வருவதை, வந்த அலைமறைய வாரி நுரையெழுப்பிப் பிந்தி வருமலையும் பின்னும் மறைந்தொழியும் ஒன்றொழிய மற்றொன்றோ ஓங்கி யுயர்ந்துவரும் வென்றெழுமுன் னாலே விழுந்து கரைந்துவிடும் (பக்.53) مb۔ا۔