பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 நாச்சியப்பன் என்று வருணிப்பதும், பயணத்தின் இன்றியமையாமையை உள்ளுருக் குள்ளேயே வாழ்வை ஒட்டி உட்கார்ந்து கொண்டிருந்தால் உலக ஞானம் தெள்ளியதாய் வளராதென் றறிஞர் சொல்வார்; திருநாடு முழுவதுமே சுற்றி வந்தால் வள்ளுவரைப் போலறிஞர் ஆக லாகும்; வளஞ்சேர்க்கும் வாணிபத்தின் திறமை சேரும்; உள்ளந்தான் விரிவாகும்;...... (பக். 142) எனப் புலப்படுத்துவதும், நடக்கின்ற போதெல்லாம் கால்வ லிக்கும் நடவாமல் இருக்குங்கால் மனந்து டிக்கும் (பக். 157) என உள்ளத் துடிப்பை எடுத்துக் கூறுவதும், நம் உள்ளத் தைக் கொள்ளை கொள்ளுவனவாக உள்ளன. ஆசிரியர் புதிய புதிய உவமைகளைக் கையாண்டு நம்மைக் களிப்பில் ஆழ்த்துகிறார். சான்றுக்குச் சில கீழே காட்டப்படுகின்றன. உண்டசோற் றுண்டையது தொண்டைக் குழியளவே தங்கிவிட்டால் உண்டாம் தடுமாற்றம் போல (பக்.60) சொன்னவன்தான் நடந்துவிட்டான் கதிர்ம்றையச் சூழ்ந்தநிழல் போலமைதி சூழ்ந்த தங்கே (பக். 119) பேனொன்று கூந்தலுக்குள் நுழைந்தாற் போலப் பின்புறமாய்க் கூடாரத் துட்புகுந்தான் (பக். 180) கவிஞர் தம் கொள்கைகளைக் கதை மாந்தர்களின் வாயிலாக வெளிப்படுத்துவது உள்ளம் ஈர்க்கத் தக்கதாய் உள்ளது. தாய்மொழியில் பேசாமல் அயல் மொழியில் பேசுவதே பெருமை எண்றெண்ணித் திரியும் போலிகளை வலிமையாகச் சாடுகிறார். தான்பிறந்த நாட்டுத் தமிழ்மொழியிற் பேசாமல் வான்வழியே வந்து குதித்திங்கு வந்தாற்போல்