பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைவந்த கலை தமிழண்ணல்" டாக்டர் இராம. பெரியகருப்பன் மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை. கவிஞர் நாரா நாச்சியப்பன் பொன்னிக் கவிக்குடும்பப் புகழ் மிகுந்த ‘பாட்டாளி. தமிழார்வமும் தமிழறிவும் சூழ வளர்ந்த மாணவப் பருவத்தினராதலால், ஆழமான புலமை யும் கூர்மையான பார்வையும் அவரிடம் உண்டு. கொஞ்சு தமிழை நெஞ்சு கலந்து பாடுமவர் பாரதிதாசன் பரம்பரை யாதற்குரிய பண்புநலன் மிக்கவர். உயரிய எண்ணங்கள், சீரிய சிந்தனைகள் இவை அவருக்கு உரிமையுடையவை. தளை பிசகாத யாப்பு, சுருதி பிழையாத பண்போல அவருடைய பாடல்களில் ஒலிக்கக் காணலாம். இன்று புதுக்கவிதை பெருகி வளரும் காலம். ஆனல் இன்றையப் புதுக்கவிதையைப் புதருக்கு ஒப்பிடலாம். இப் புதரில் மணமுள்ள மலர்கள் மிகக்குறைவாகவே பூக்கின்றன: நிறமுள்ள பூக்களும் மிகச் சிலவே. தும்பும் தூறுமாய் வேரும் கொடியுமாய்ப் புதர்தான் இங்கே மண்டிக் கிடக்கிறது. இவர்கள் செய்யும் புதுமையெல்லாம் பொருள் விளங்காத பிறமொழிச் சொற்களை அளவின்றிப் பெய்வது; உரோமன் எழுத்துக்களை அப்படியே தமிழில் எழுதுவது; புராணக் குப்பைகளில் கிடந்து புரள்வது; தமிழில் புதுக்கவிதை கூடாதென்ரு யாரும் கூறுகிருர்கள்? அதை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு மீண்டும் மணிப்பிரவாளக் காலத்தைக் கொணர நினைக்கும் இவர்களின் கூச்சலை-வெறுங் கூச்சலே