பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்றலர்ந்த புதுமலர் டாக்டர் பொன். கோதண்டராமன் (பொற்கோ) இளநிலைப் பேராசிரியர், தமிழ்த்துறை, சென்னைப் பல்கலைக் கழகம். கவிஞர் திரு நாச்சியப்பன் அவர்களின் பாடல் தொகுப்புகளில் ஒன்ருகத் திகழும் இந் நூலைப் படித்து மகிழும் வாய்ப்பினை இந்நூலாசிரியர் எனக்கு அன்போடு வழங்கினர். நூல் முழுதையும் சலிப்பில்லாமல் மகிழ்வோடு படித்து முடித்தேன். அந்த அளவுச்கு இந்த நூலில் புதுமை களும், தனித்தன்மைகளும் அமைந்துள்ளன. உரைநடையில் அமைந்துள்ள இக் காலச் சிறு கதைக ள்ோடு ஒப்ப வைத்து எண்ணத் தக்க வகையில் ஒவ்வொரு கவிதையும் அமைந்துள்ளது. ஒவ்வொரு கவிதையையும் ஒரு சிறு காவியம் என்று சொன்னல் தவறில்லை. இந்த நூலில் காணும் ஒவ்வொரு சிறு காவியமும் சிறந்த நோக்கத்தின் அடிப்படையில் எழுந்துள்ளது என்பது இந்த நூலை ஒரு முறை படிப்பார்க்கும் நன்கு விளங்கும். இன்றைய சமுதாயத்தின் தேவைக்கு ஏற்றபடி புதுமைக் கருத்துகளையும், புரட்சிக் கருத்துகளையும் அழகுற அமைத்துக் கவிதைகளைப் பின்னியிருக்கிருர் ஆசிரியர். புதுமைகளையும் புரட்சிகளையும் படைப்பதோடு காக்க வேண்டிய சிறந்த சில பண்பாட்டுக் கூறுகளையும் போற்ற உரிய இடம் தரும் போதுதான் ஒரு கவிஞன் மக்கள் மனதில் இடம் பெற்று உயருகிருன். கவிஞர் நாச்சியப்பன் அவர்கள் தம் கவிதைகளின் மூலம் வழங்கியுள்ள கதைகளில்