பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 போற்றத்தக்க பண்பாட்டுக் கூறுகளைச் சிறப்புறப் போற்றியிருப்பது குறிப்பிடத் தக்கது. ஒவ்வொரு கவிதையும் ஒரு கலைப் படைப்பாகத் திகழ்கிறது. இவருடைய கவிதையில் காணும் மொழிநடை இனிய எளிய நடையாக அமைந்துள்ளது. கவிதையில் ஆர்வம் கொண்ட யாரும் இவர் கவிதைகளை எளிதில் படித்துச் சுவைக்கலாம். எடுத்துச் சொல்லும் கருத்துகளும் இங்கே இவர் ஆண்டுள்ள சொற்களும், தொடர்களும் இன்றைய தமிழ்ச் சமுதாயத்தோடு தொடர்புடையனவாக இருப்ப தால் இங்கே காணும் கவிதைகள் உயிரோட்டம் உடையன வாகவும், ஆற்றல் மிக்கனவாகவும் உள்ளன. இன்றைய உலக நடைக்கேற்ப இவர் எடுத்தாண்டுள்ள சொற்களும் தொடர்களும் பல இடங்களில் நம் மனத்தைக் கவர்ந்து கவிதைகளோடு நம்மை எளிதில் ஒன்று படுத்துகின்றன. நூலில் பல்வேறு இடங்களில் மிகப்பெரிய சீர்திருத்தக் கருத்துகளைப் பழமைவாதிகளும் தம்மை மறந்து ஒப்பு கின்ற வகையில் திறம்படவும், சுவை படவும் இந் நூலாசிரியர் வழங்கியிருக்கிரு.ர். இது இந்நூலாசிரியரின் தனித்திறம். மரபு, புதுமை ஆகிய இரண்டையும் இணைக்கின்ற இயல்பு பொதுவாக நல்ல கவிதைகளுக்கு உண்டு. இவருடைய கவிதைகளில் காணும் உவமைகள் இந்த உண்மையை நமக்குப் பளிச்சென விளக்குகின்றன. இன்றைய வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்றபடி ஆசிரியர் பல புதிய உவமைகளைப் படைத்துக் கொடுத்திருக்கின்ருர். மக்கள் வழக்கில் நன்கு இடம் பெற்றும், இலக்கியத்தில் இடம் பெருத சில நல்ல வழக்குச் சொற்களுக்கு இந் நூலாசிரியர் இலக்கியத் தகுதி வழங்கியிருக்கிரு.ர். இத்தகைய வழக்குச் சொற்கள் பக்குவமாக இந்நூலில் ஆளப்பட்டிருப்பதால் இவருடைய கவிதைகள் அன்