பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


36 றலர்ந்த புது மலர்போல் புதுமைப் பொலிவு பெற்று விளங்குகின்றன. கற்பனைத் திறம் இல்லாத யாரும் இலக்கியப் படைப்புத் தொழிலில் ஒருபடிகூட முன்னேற முடியாது. கற்பனையை வேண்டத்தக்க கற்பனை, வீண் கற்பனை என்று இரண்டாகப் பிரித்துக் கொண்டால் இந்த நூலில் காணும் கற்பனைகளில் வீண் கற்பனையே இல்லையென்று சொல்லலாம். இந்நூலில் காணும் பல கற்பனைக் காட்சிகள் உயிரோவியங்களாக நம் கண்முன் வந்து நிற்கின்றன. கவிஞர் நாச்சியப்பன் அவர்கள் மரபு பிறழாத யாப்பில் இயல்பாகவே இந்தக் கவிதைகளைப் பாடியிருக் கிரு.ர். வெண்பா யாப்பையும், விருத்த யாப்பையும் மிகுதி யாகக் காணுகிருேம். கவிதையும் உரைநடையும் உலக மொழிகளுக்கெல்லாம் இரண்டு கண்கள் போல அமைந்தவை எனலாம். உள்ளமும் உணர்வும் இருக்கும்வரை கவிதைக்கு உரிய இடத்தை யாரும் குறைக்கவோ, மறுக்கவோ, மறைக்கவோ இயலாது. கவிதைகளை 1. ஓசை நயத்தைப் போற்றும் கவிதைகள், 2. ஒசை நயத்தைத் துறந்த கவிதைகள் என்று இரண்டு பெரும் பிரிவாகப் பிரிக்கலாம். இந்த இரு பிரிவுகளும் கவிதைகளின் இரண்டு பிரிவுகளே தவிர எதிரிகள் அல்ல. மரபுக் கவிதைகள் புதுக்கவிதைகள் ஆகிய இரண்டு வகைக் கவிதைகளிலுமே நல்ல கவிதைகளும் உண்டு; வெற்றுக் கவிதைகளும் உண்டு. கவிஞர் நாச்சியப்பன் அவர்களின் கவிதைகள் மரபுக் கவிதைகளில் வரவேற்கத்தக்க நல்ல கவிதைகள். கதைகளைச் சிறு காவியங்களாகப் பாடும் இத்தகைய புதிய முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டும். தமிழகம் கவிஞர் நாச்சியப்பன் அவர்களின் நன்முயற்சியைப் பாராட்டி ஊக்குவிக்கும் என்று பெரிதும் நம்புகிருேம். 30–5–1980 பொற்கோ